அபிராமம் கல்வி நிகழ்ச்சி..

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அபிராமத்திற்கு வருகை புரிந்தார்.

அபிராமம் முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் +2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிடும் நிகழ்வில் பங்கேற்று அவர்களை பாராட்டினார்.

முதலிடம் பெற்ற M.பாலசெல்வி, இரண்டாம் இடம் பெற்ற M.ஆசிமா, மூன்றாம் இடம் பிடித்த N.ஃபாத்திமா மர்ஜுகா, ஆகியோருக்கு புத்தகம், சால்வை மற்றும் பூங்கொத்தை அளித்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பேசிய அவர், 1934-ஆம் ஆண்டிலேயே இப்பள்ளிக்கூடத்தை தொடங்கிய அபிராமம் ஜமாத்தினரின் தூர நோக்கு பார்வையை பாராட்டினார்.

மேலும் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய இப்பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி அமீர் ஹம்சாவின் தியாகங்களையும் நினைவுகூர்ந்தார்.

இப்பகுதியை சேர்ந்த அனைத்து சமூக பிள்ளைகளின் கல்விக்கு சேவையாற்றி வரும் அபிராமம் கல்வி அறக்கட்டளை நிர்வாகத்திற்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அபிராமம் கல்வி அறக்கட்டளையின் துணை செயலாளர் இ.ஹமீது, உறுப்பினர் மாம்சா.சாகுல் ஹமீது, தலைமை ஆசிரியர் M.A. ஹுசைன், துணை தலைமை ஆசிரியர்கள் H.முஹம்மது ரபீக், Y.ராவுத்தர் நைனா, ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.

இதில் மஜக மாநில துணை செயலாளர் பேராவூரணி சலாம், மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் மீசல்.கனி, கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் முகவை நசீர், கீழை. இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.