குவைத் மண்டல MKP சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்…

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின்(MKP) குவைத் மண்டலம் சார்பாக இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஆறாம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம் 20-01-2023 வெள்ளிக்கிழமை அன்று ஜாப்ரியா மத்திய இரத்த வங்கியில் மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வை IKP செயலாளர் நீடூர் ஹாலிக் அவர்கள் கிராஅத் ஓதி துவக்கிவைக்க, மண்டல மருத்துவ அணி செயலாளர் நாகை இப்ராஹீம் அவர்கள் அனைவரையும் வரவேற்று மருத்துவ முகாமை துவக்கி வைத்தார், இதில் மண்டல ஆலோசகர் இளையான்குடி சீனி முகம்மது, பொருளாளர் சதகதுல்லாஹ் உள்ளிட்ட மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்

இந்நிகழ்வில் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகளும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு குவைத் MKP தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடத்துவதை வெகுவாக பாராட்டியதோடு இரத்த தானம் வழங்கியவர்களை வாழ்த்தினர்.

கடந்த ஆறு ஆண்டுகளாக MKP-யின் இரத்ததான முகாமிற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் குவைத் மத்திய இரத்த வங்கிக்கு குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக நினைவு பெட்டகம் வழங்கப்பட்டது.

இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர், இரத்த தானம் வழங்கியவர்களுக்கு மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக பாராட்டு சான்றிதழும் பரிசுகளும் வழங்கபட்டது, வருகை தந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.