
தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் நஜீப் தலைமையில் நிர்வாகிகள், ECR சாலையிப் பயணம் மேற்கொண்டிருந்த பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை தூத்துக்குடியில் சந்தித்து கலந்துரையாடினர்.
அப்போது ‘மக்களுடன் மஜக’ பணிகளின் திட்டமிடல் குறித்து பொதுச் செயலாளர் கேட்டறிந்தார்.
குடியரசு தினத்திற்கு பிறகு இப்பணிகளை கிளை வாரியாக முன் எடுக்க உள்ளதாகவும், அமைச்சர், கலெக்டர், MP, MLA க்களை கோரிக்கைகளுடன் சந்திக்கும் நிகழ்வுகள் இருப்பதாகவும் மாவட்டச் செயலாளர் கூறினார்.
அப்போது துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநிலச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் உடனிருந்தனர்.