ஜூலை.14
இராமநாதபுரம் கடலோர பகுதிகளில் #கடல்_அட்டை பிடிக்க முந்தைய பாஜகவின் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது தடை விதிக்கப்பட்டது.
அன்றைய கூட்டணி ஆட்சியில் திமுக சார்பில் மத்திய அமைச்சராக TR.பாலு அவர்கள் இருந்த போது, 15 ஆண்டு காலத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் 21 ஆண்டுகள் ஆகியும் அது நீடிப்பதை எதிர்த்து ராமநாதபுரத்தில் மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது அரிய வகை உயிரினம் இல்லை என்றும், பல்கிப் பெருகும் உயிரினம் என்றும், ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் முக்கிய உணவுப் பொருள் என்றும் மீனவர்கள் வாதிடுகின்றனர்.
இதை மீண்டும் சட்டப்பூர்வ கடல் தொழில் என ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதில் பங்கேற்று விட்டு திரும்பும்போது, மண்டபத்தை சேர்ந்த 4 மீனவர்கள் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று அதில் காயமடைந்த மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
அன்றைய தினம் நிகழ்விடத்திலேயே பலியான சேது, ரஜபு, அன்சர் அலி, முகைதீன் அப்துல் காதர் ஆகிய நால்வர் வீடுகளுக்கும் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அவருடன் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்களும் உடன் சென்றார்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பொதுச் செயலாளர் அவர்கள், அவர்களுக்கு ஆறுதல் இழப்பீடாக தலா 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்கிட, கலெக்டர் மூலம் பரிந்துரைப்பதாக கூறினார்.
அங்கேயே மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதி, மஜக மாவட்ட நிர்வாகிகளிடம் கொடுத்து நாளை ஒப்படைக்க அறிவுறுத்தினார்.
மேலும் மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கவனத்திற்கும் எடுத்து செல்வதாக கூறினார்.
இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்கள் கோட்டை ஹாரிஸ், பேராவூரணி அப்துல் சலாம், மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் முகவை நசீர், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கீழை செய்யது, சோனாப்பூர் அஜ்மல், மரைக்காயர்ப்பட்டிணம் ஹாஜா, மற்றும் முகவை ஹனீபா உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_இராமநாதபுரம்_மாவட்டம்.
14.07.22