உண்ணாவிரத போராட்டம்.! மஜக துணைப் பொதுச்செயலாளர் பங்கேற்பு..!

சென்னை.ஜூன்.05., 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக் கோரி சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் கௌஸ், ஜல்லிக்கட்டு ஜலீல் ஆகியோர் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது.

இப்போராட்டத்தில் மஜக துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் பங்கேற்று கருணை அடிப்படையில் 25 வருடங்களை கடந்த சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

உடன் மஜக மாநில துணைச்செயலாளர் அஸாருதீன், மாணவர் இந்தியா மாநில தலைவர் பஷீர் அஹமது அவர்கள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சென்னை_மாவட்டம்
05.06.2022