73வது குடியரசு தின விழா! இளையான்குடியில் மஜக மாநில துணைசெயலாளர் சைபுல்லாஹ் சிறப்புரையாற்றினார்!

ஜன:26., சுதந்திர இந்தியாவின் 75 ஆம் ஆண்டில் நாட்டின் 73 வது குடியரசு தின விழாவை இன்று கொண்டாடுகிறோம்.

குடியரசு தினத்தை தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் குடியரசு தின விழா நடைபெற்றது.

இதில் கீழையூரைச் சேர்ந்த பெரியகருப்பன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைபுல்லா, அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் சாகுல் ஹமீது சேட், இளையான்குடி நகர பொருளாளர் உஸ்மான் அலி, நகர துணை செயலாளர் செய்யது, மகபூப், சலீம், அபூபக்கர், ஷேக், தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சதாம் உசேன், நகர மருத்துவர் அணி செய்லாளர் முஸ்தபா, ஜமால் முகமது, நைனா, மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் தஸ்லீம், உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#சிவகங்கை_மாவட்டம்
26.01.2022