மஜக ஆறாம் ஆண்டு துவக்கம் மற்றும் குவைத் தேசிய நாள்! சிறப்பு காணொளி கருத்தரங்கம்..! மஜக பொதுச்செயலாளர் பொருளாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு..!

குவைத்.பிப்.28, மனிதநேய ஜனநாயக கட்சியின் (#MJK) வெளிநாட்டு பிரிவான குவைத்

மனிதநேய கலாச்சார பேரவையின் (#MKP)சார்பாக மஜகவின் ஆறாம் ஆண்டு துவக்கம் மற்றும் குவைத் தேசிய நாளை முன்னிட்டு சிறப்பு காணொளி கருத்தரங்கம் 26-02-2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30pm மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் #மஜக மாநில செயலாளரும் குவைத் மண்டல பொறுப்பாளருமான சகோ.ராசுதீன் B.sc, Ex.MC அவர்கள் மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முஹம்மது அவர்கள் மற்றும் மண்டல பொருளாளர் பொதக்குடி சதக்கத்துல்லாஹ் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்நிகழ்ச்சியின் துவக்கமாக மண்டல துணை செயலாளர் வேலம்புதுகுடி சர்புதீன் அவர்கள் நீதிபோதனை வழங்க மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் பரங்கிப்பேட்டை ஹாஜா மக்தும் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மஜக பொதுச்செயலாளரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான சகோ M.தமிமுன் அன்சாரி MA MLA அவர்கள் குவைத் தேசத்தின் பாரம்பரியத்தை எடுத்துரைத்ததோடு குவைத் வாழ் மக்கள் அனைவருக்கும் தேசிய தினத்தின் வாழ்த்துக்களை தெரிவித்தார், தொடர்ந்து மஜக துவங்கத்தை நினைவு கூர்ந்த அவர்கள் மஜகவின் வெளிநாட்டு பிரிவுகளின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார்.

தொடர்ந்து மஜக மாநில பொருளாளர் சகோ SS.ஹாரூன் ரசீது M.com அவர்கள் உரையின் போது மஜக துவங்கப்பட்டதிலிருந்து செய்து வந்த பணிகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் நினைவு கூர்ந்ததோடு வரக்கூடிய காலங்களில் அரசியல் அரங்கில் மஜக தவிர்க்கமுடியாத கட்சியாக விளங்கும் வகையில் செயல்படுவதாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து அவரது குவைத் வருகையின் போது நடைபெற்ற சுவாரஸ்யங்களை பகிர்ந்துக்கொண்டதோடு #குவைத்_தேசிய_தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் #மருது_மக்கள்_இயக்கம் நிறுவன தலைவர் தோழர் முத்துபாண்டி அவர்கள் பேசிய போது மஜகவின் பொதுசெயலாளர் சகோ தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்தும் மஜகவின் மக்கள் நல போராட்டங்கள் குறித்தும் வெகுவாக பாராட்டிய அவர் தொடர்ந்து மஜகவுடன் நல்விஷயங்களில் இணைந்திருப்பதாகவும் உறுதியளித்தார், தொடர்ந்து பண்டைய கால குவைத்தினை விவரித்த அவர், அனைவருக்கும் தேசிய தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

சிறப்புரையை தொடர்ந்து மஜக மாநில செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹுசைன் அவர்கள், மஜகவின் வெளிநாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக மண்டல செயலாளர் நாச்சிகுளம் Dr.அசாலி அவர்கள், பஹ்ரைன் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்கள், கத்தர் மண்டல செயலாளர் ஆயங்குடி யாசின் அவர்கள், ஜித்தா மண்டல ஆலோசகர் ஆக்கூர் ரிபாய், ஓமான் மண்டல பொறுப்பாளர் சங்கை ஜவஹாத் அவர்கள் மற்றும் சமூக ஆர்வலர் இஸ்லாமிய அழைப்பாளர் முகவை அப்பாஸ் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இறுதியாக மண்டல ஊடகத்துறை செயலாளர் ஆயங்குடி சையது முஹம்மது அவர்கள் நன்றியுரை வழங்க காணொளி கருத்தரங்கம் இனிதே நடைபெற்றது.

தகவல் :
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#Humanitarian_Cultural_Association
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#MJK_IT_Wings_Kuwait
குவைத் மண்டலம்
60338005 – 99739626 – 65510446

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*