You are here

UAPA சட்டத்தை ரத்து செய் NIA நிறுவனத்தை கலைத்திடு என வலியுறுத்தி தஞ்சையில் போராட்டம்! மஜக இணைப் பொதுச்செயலாளர் JS ரிஃபாயி பங்கேற்று கண்டன உரை!!


பிப்.20,
டெல்லியில் நடைப்பெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் திசா ரவி மற்றும் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

உபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். NIA வை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி பங்கேற்று சட்டங்களை கண்டித்து உரையாற்றினார். இதில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இதில் தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் அகமது கபீர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜாபர் அலி, திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டு (எ) ஹபீப் ரஹ்மான், மாநகர செயலாளர் அப்துல்லாஹ், துணைச் செயலாளர் சாகுல் அமீது, வார்டு செயலாளர் காமில் உள்ளிட்ட மஜகவினர் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.

Top