மார்ச் 21 அன்று, பிற்படுத்தப்பட்டோர் மானியக் கோரிக்கை விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பேசினார்.
கள்ளர் சீர்த்திருத்த பள்ளிகளை தமிழக அரசு மேம்படுத்தி அதன் உள் கட்டமைப்புகளை சீர்படுத்தி, போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார்.
அவரது கோரிக்கையை ஏற்கும் வகையில், அமைச்சர் வளர்மதி அவர்கள் கீழ்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு மேஜை, இருக்கைகள் வாங்க 1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும், பள்ளிகளில் சாய்தள வசதி ஏற்படுத்த 2 கோடியே 40 லட்சத்து 79 ஆயிரம் வழங்கப்படும், 25 விடுதிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட 3 கோடி ஒதுக்கப்படும், கணினிகள் வாங்க 96 லட்சத்து 41 ஆயிரம் வழங்கப்படும், 6-ஆம் வகுப்பில் ஆங்கில வகுப்புகள் தொடங்க 1 கோடியே 50 லட்சம் வழங்கப்படும் என 5 முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.
இதற்காக அரசுக்கும், அமைச்சருக்கும் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இக்கோரிக்கையை பேரவையில் எழுப்பியதற்காக, அவரை அமைச்சர் செல்லூர்.ராஜ், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA., மற்றும் பல MLA-க்களும் பாராட்டு தெரிவித்தனர்.
இது அம்மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை என்பதும், எழுத்தாளர் சுந்தரவள்ளி போன்றோர் அவரது கவனத்துக்கு இதை எடுத்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு பார்வர்டு பிளாக் கட்சிகளை சேர்ந்த திரு .PV.கதிரவன் Ex MLA, திரு.திருமாறன், டாக்டர். இளங்கோ போன்ற தலைவர்கள் அவரை அலைபேசியில் தொடர்புக் கொண்டு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்