நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் கபடி திருவிழா மஜகதலைவர்கள் பங்கேற்பு..!!


இளையான்குடி.ஜனவரி.20.,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகில் உள்ள அரனையூர் கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அழைப்பை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், முஹம்மது சைபுல்லாஹ், வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் ஷாகுல் ஹமீது சேட், சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஹாஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் மன்னிவாக்கம் யூசுஃப், துறைமுகம் சிக்கந்தர், வாணியம்பாடி அக்மல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் இளையான்குடி செவன்-ப்ளஸ் அணியினர் முதல் பரிசு வென்றனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சிவகங்கை_மாவட்டம்
20.01.2020

Top