திருவாரூர்.நவ.10.,
திருவாருர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் அனைத்து நிர்வாகிகள் பங்கேற்று ,பொதுச் செயலாளரோடு நேரடியாக கலந்துரையாடும் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் எழுச்சியோடு நடைப்பெற்றது.
கட்சியில் தற்போது நடைப்பெற்று வரும் உறுப்பினர் சேர்ப்பு குறித்தும், மாவட்டம் முழுக்க 5 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
டிசம்பர் 6 போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் கலந்துரையாடல் நடைப்பெற்றது.
பிறகு நிர்வாகிகள் அனைவரும் பொதுச் செயலாளரிடம் கட்சியின் வளர்ச்சி, அடுத்த கட்ட நகர்வு, நடப்பு அரசியல் சூழல், கள நிலவரம் ஆகியவை குறித்து கேள்விகளை அடுக்கினர். அனைத்திற்கும் அவர் விளக்கமளித்தார்.
எல்லா சமூக மக்களும் பாராட்டும் வகையில் மஜக வின் அணுகுமுறைகள் இருப்பதாகவும், வெவ்வேறு அணிகளில் உள்ள கட்சியினரும் அதை கூறுவதாவும் நிர்வாகிகள் கள நிலவரம் குறித்து கூறினர்.
சுமார் 200 நிர்வாகிகள் பங்கேற்ற இந்நிகழ்வு கட்சி ஊழியர்களின் குடும்ப நிகழ்வு போல இருந்ததாக பலரும் நெகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில விவசாய அணி செயலாளர் நாகை. முபாரக் , தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் ஹமீது ஜெகபர் ஆகியோர் பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் , பொருளாளர் ஷேக் அப்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜம்ஜம் சாகுல், ஜெய்னுதீன்,மாவட்ட துணைச் செயலாளர் லியாக்கத் அலி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK IT WING
திருவாரூர் மாவட்டம்.
10.11.18