தமிழக அரசு கேட்டிருக்கும் நிவாரண நிதி 1000 கோடியை மத்தியஅரசு உடனே வழங்க வேண்டும் .! மனிதநேய ஜனநாயக கட்சி வேண்டுகோள்…

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) .

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை , காஞ்சிபுரம் , மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தமிழக அரசு மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அனைவராலும் பாராட்டப்படுகிறது . ஒரு பெரும் புயல் தாக்கத்திற்கு பின்னால் முதல்வர் அண்ணன் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் தொடங்கி அமைச்சர்களும் , அதிகாரிகளும் , கடைநிலை ஊழியர்களும் கடந்த 4 நாட்களாக இரவும் , பகலும் ஆற்றி வரும் பணிகளால் இந்த மூன்று மாவட்டங்களிலும் விரைவாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர் .

புயலில் உயிரிழந்தவர்களுக்கும் , உயிரிழந்த கால்நடைகளுக்கும் , சேதப்படுத்தப்பட்ட குடிசை வீடுகளுக்கும் நிவாரண நிதியை அறிவித்திருப்பதும் , புயல் சேத சீரமைப்பிற்கு ரூ.500 கோடியை தமிழக அரசின் சார்பில் வழங்கியிருப்பதும் வரவேற்க்கத்தக்கதாகும் .

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உரிய நஷ்ட ஈடு கிடைக்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .

மேலும் புயல் சேத சீரமைப்பிற்கு தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதி 1000 கோடியை , மத்திய அரசு தனது பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனே வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் .!

இவண்:
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
16-12-2016

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*