Month: May 2024
வயநாடு பரப்புரை கேரளாவில் மஜக ஆலோசனைக் கூட்டம்…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரையை தொடங்கியுள்ளார். பொன்னானி, மலப்புறம், வயநாடு, நாடாளுமன்ற தொகுதிகளில் அவரது பரப்புரைக்கு UDF கூட்டணியின் நிர்வாகிகள் திட்டம் வகுத்து வருகின்றனர். இன்று காலையில் பொன்னானி தொகுதியில் முதல் கட்ட பரப்புரை முடிந்த பிறகு அடுத்த கட்ட பரப்புரைகள் குறித்து திட்டமிடும் பணிகள் தொடங்கியுள்ளது. மதியம் கோட்டக்கலில் கேரள மாநில பொறுப்பாளரும் மாநில துணைச் செயலாளருமான ஜாவித் ஜாபர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அப்போது காங்கிரஸ் பொறுப்பாளர் நாசர் அவர்களுடன் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அவர்களுக்கு பரப்புரை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர்கள் நாகை. முபாரக், நெய்வேலி.இப்ராஹிம், மாநில துணைச் செயலாளர் பேராவூரணி.சலாம், மாநில இளைஞரணி பொருளாளர் கோவை பைசல்,கோவை தெற்கு மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ், நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி, கேரள மாநில தேர்தல் பணி குழுவின் பொறுப்பாளர்கள் சைஜல், ஹாரிஸ், நாராயணன் ஆகியோர்கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கேரளா- தென்னிந்தியா 21.04.24.
கேரளாவில் பரப்புரை … எதிர்கட்சி தலைவர் சதீசனுடன்… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பரப்புரை…
ஏப்ரல்.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் காங்கிரஸ் - IUML அங்கம் வகிக்கும் UDF கூட்டணியை ஆதரித்து இன்று கேரளாவில் பரப்புரையை தொடங்கியுள்ளார் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் எதிர்கட்சி தலைவரான V.D. சதீசன் அவர்களை. பொன்னானி நாடாளுமன்ற தொகுதிக்கப்பட்ட திரூர் அங்காடியில் பரப்புரையில் சந்தித்து, அவருடன் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார். இங்கு UDF சார்பில் IUML வேட்பாளர் அப்துல் சமது சமதானி போட்டியிடுகிறார். திருர் அங்காடி முஸ்லிம் லீக் MLA K.P.A மஜீது MLA-வும் பங்கேற்றார். அவரது பரப்புரைக்கு வரவேற்பளித்த மலையாளிகள் ஆர்வத்துடன் நீண்ட நேரம் தற்படம் (Selfi) எடுத்த வண்ணம் அவருடன் உரையாடினர்கள். பலர் யூட்யூப் (YouTube) பில் அவரது சட்டமன்ற நடவடிக்கைகளை பார்த்து அதை சுட்டிக்காட்டி பாராட்டினர். (செய்திகள் உள்ளிட விரிவான தகவல்கள் அடுத்த பதிவில் பகிரப்படும்) தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கேரளா - #தென்னிந்தியா 21.04.2024.