நெல்லை.ஜன.31 நெல்லை மாநகர் முழுவதும் சாலைகள் தோண்டபட்டு சீர் செய்யபடாமல் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் இருப்பதை கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்து DYFI அமைப்பின் ஒருங்கிணைப்பில் தர்ணா போராட்டம் நெல்லை டவுண் வாகையடிமுக்கில் நடைபெற்றது. தர்ணாவில் நெல்லை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மஜக நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாம் அவர்கள் கண்டன உரையாற்றினார். இப்போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா, கொள்கை விளக்க அணி செயலாளர் N.அப்பாஸ், மாநகர செயலாளர் பீர்முஹம்மது, மாநகர துணைசெயலாளர் சுல்தான் அலாவுதீன், பேட்டை நகர சம்சுதீன், ஆதிமூலம், மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #நெல்லை_மாவட்டம் 31-01-2021
Month:
மஜக கொடியேற்று விழா! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு! பூங்கொத்துகளுடன் சிறுவர் சிறுமியர் வரவேற்பு!
ஜனவரி 31, கோவையில் குறிச்சிப்பிரிவு பகுதியில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்து கொடியேற்றினார். அப்போது சிறுவர், சிறுமியர் ரோஜா பூங்கொத்துகளை கொடுத்து அவரை வரவேற்றனர். ஒவ்வொரு பிள்ளையையும் பெயர் கேட்டு, அவர்களது படிப்பையும் விசாரித்து பொதுச் செயலாளர் அவர்கள் பூங்கொத்துகளை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் தொழிற்சங்க மாநில செயலாளர் MH. ஜாபர் அலி, கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், கிணத்துக்கடவு பகுதி துணை செயலாளர் அக்பர்அலி, குறிச்சி பிரிவு கிளை செயலாளர் சலாம், மற்றும் கிளை, நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 30.01.2021
நகை பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த MJTS ஆட்டோ ஓட்டுனர்கள்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பாராட்டு!
ஜனவரி 30, கோவையில் மஜக சார்பு தொழிற்சங்கமான MJTS சார்பில் புதிய பாதை மீட்டர் ஆட்டோக்கள் 200 க்கும் மேற்பட்டவை கோவை மக்களிடம் நற்பெயரை ஈட்டி வருகின்றன. மீட்டர் கட்டணம் மட்டுமே வாங்குவது, பாதுகாப்பான சேவை, ஆகியவற்றுக்கு தொடர் பாராட்டுகளை மக்களிடம் பெற்று வருகிறது. அந்த வரிசையில் காளிதாஸ் என்ற ஒட்டுனர்,, ஒரு பயணி தவற விட்டுச் சென்ற 10, பவுன் நகைகளை மீட்டுக் கொடுத்தார், அது போல் நூர்தீன், என்ற ஓட்டுனர் பயணி ஒருவர் ஆட்டோவில் தவறவிட்ட செல்போனை அவரிடம் ஒப்படைத்தார். இதை MJTS புதிய பாதை கால் டாக்ஸி திறப்பு விழாவில் சுட்டிக்காட்டி பேசிய, பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், நேர்மையை வெளிப்படுத்தி இவர்கள் நம் தொழிற்சங்கத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள் என பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 30.01.2021
பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து MJTS அண்ணாநகர் பகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.! மஜக துணை பொதுச்செயலாளர் தைமிய்யா மாநிலசெயலாளர் சீனிமுகம்மது பங்கேற்பு..!!
சென்னை.ஜன.31., மத்தியில் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பன் மடங்காக அதிகரித்துள்ளது, அதன் அடிப்படை காரணம் பெட்ரோல் டீசல், விலை ஏற்றம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை அமலுக்கு வந்த பிறகு நாள்தோறும் 10 காசுகள், 12 காசுகள் என பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே வந்து வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. இதை கண்டித்து மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS), மத்திய சென்னை மேற்கு மாவட்டம், அண்ணாநகர் பகுதி சார்பாக இன்று அரும்பாக்கம் MMDA பால் பூத் அருகில் பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் NA.தைமிய்யா, மாநிலச் செயலாளர் ஜெ.சீனி முஹம்மது, மாநிலத் துணைச் செயலாளர் ஷமீம் அஹமது, MJTS தலைவர் சலிமுதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். மேலும் மஜக மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் அன்வர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர்
பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLAவுடன் கோவை SIO மாணவர்கள் சந்திப்பு!
ஜனவரி 31, கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை , கோவை மாநகர SIO மாணவர்கள் சந்தித்து உரையாடினர். கல்வி, இதழியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் அவர்கள் ஆற்றி வரும் பணிகளை விவரித்தனர். அவர்களின் பணிகளை பாராட்டிய பொதுச் செயலாளர் அவர்கள் , நாடு தழுவிய அளவில் SIO ஆற்றி வரும் பணிகளை, தான் கவனித்து வருவதாகவும் , அது நம்பிக்கை ஊட்டுவதாக இருப்பதாகவும் கூறினார். கோவை மாநகர SIO வின் பணிகள் சிறப்பாக இருப்பதற்கு பாராட்டுகளையும் கூறி அவர்களை உற்சாகப்படுத்தினார். நிதானமும், பக்குவமும் கொண்டவர்களாக SlO மாணவர்கள் செயல்படுவது தனக்கு பிடித்திருப்பதாகவும் கூறினார் . பின்னர் அவர்கள் பொதுச் செயலாளரிடம் தங்களது வெளியீடு களை அளித்து படம் எடுத்துக் கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 30.01.2021