கோவை.செப்.15.,. மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் மத்திய பகுதிக்குட்பட்ட கோட்டை கிளை ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் பூ.காஜா, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தொழிற்சங்க செயலாளர் MH.ஜாபர்அலி, மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் TA.நாசர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் PM.முகம்மதுரபீக், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல், மத்திய பகுதி பொருளாளர் சுவனம் கமால்பாட்ஷா, கிணத்துகடவு பகுதி செயலாளர் காதர், பொருளாளர் ஹாருண்ரஷீது, மத்திய பகுதி இளைஞரணி செயலாளர் பைசல்ரஹ்மான், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பெல்ட் இப்ராஹீம், அப்துல்சலாம், ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கோட்டை கிளையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சகோதரர்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டனர் அவர்களுக்கு மஜக வின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இறுதியில் கோட்டை கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் கிளை செயலாளராக MR.பஜ்ஜர்ரஹ்மான், பொருளாளராக R.மொய்தீன், துணை செயலாளர்களாக H.முகமதுஆசிப், S.காதர்பாஷா, ஆகியோரை தேர்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைக்காக அனுப்பப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK _IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 12.09.2018
Month:
கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் MJTS நிர்வாக கூட்டம்..!
கோவை.செப்.14., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் நிர்வாக கூட்டம் மாவட்ட தலைவர் ஹக்கீம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அபு, மாவட்ட துணை செயலாளர்கள் உசேன்,யூசுப்,புதிய பாதை மீட்டர் ஆட்டோ தலைவர் செய்யது இப்ராஹீம், செயலாளர் ஆசிக், பொருளாளர் சிராஜ்தீன், துணை தலைவர் அக்கீம், துணை செயலாளர்கள் சக்திசரவணன், ஜாகீர், ஷாஜகான், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.புதிய பாதை மீட்டர் ஆட்டோ வளர்ச்சிக்காக தனி அலுவலகம் மற்றும் கால் சென்டர் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. 2.தொழிற்சங்கத்தில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து கிளைகள் மற்றும் ஆட்டோ நிறுத்தங்கள் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING. #கோவை_மாநகர்_மாவட்டம். 13.09.18
பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி சென்னை கூடுதல் கமிஷனருடன் மஜக மாநிலச் செயலாளர் சந்திப்பு..!
சென்னை. செப்.12., சங்பரிவார அரசியல் ஊர்வலத்தையொட்டி தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அதிக பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சென்னை கூடுதல் கமிஷனர் மகேஷ் அகர்வால் அவர்களை #மனிதநேய_ஜனநாயக_கட்சி மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா M.SC. அவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்ததோடு விளக்கமாக எடுத்துரைத்தார். அவருடன் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்டப் பொருளாளர் அமீர் அப்பாஸ், மாவட்டத் துணைச் செயலாளர் ரவூப் ரஹீம், எழம்பூர் பகுதி 104 வது வட்ட துணைச் செயளாளர் முகம்மது ஷபி ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல் இமானுவேல் சேகரன்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் அறிக்கை) தென் தமிழ் நாட்டில் நிறைந்து வாழும் தேவேந்திர குல வேளாளர் இன மக்களின் உரிமை குரலாக வாழ்ந்த ஐயா. இமானுவேல் சேகரனின் நினைவேந்தல் வருடந்தோறும் செப்டம்பர் 11 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பின்தங்கிய மக்களின் வாழ்வும், சுயமரியாதையும் மேம்பட உழைத்த தலைவர் அவர். கல்வி, தொழில், சமூக அமைப்பு ஆகியவற்றில் அயராது உழைத்து மேம்படுவது ஒன்றே அவருக்கு செலுத்தும் உயர்வான மரியாதையாகும். இதற்கு அம்மக்களுடன் இணைந்து அனைவரும் பாடுபட உறுதியேற்போம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 11.09.2018
பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..! மஜக மாநில பொருளாளர் கலந்துகொண்டு கண்டன உரை..!
சென்னை.செப்.10., ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய பாசிச பிஜேபி மோடி அரசை கண்டித்து அனைத்து கட்சிகள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (10.09.2018) மாலை 5.00 மணியளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது. இதில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.Com., அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் ஜனநாயகத்திற்கு எதிரான கொள்கைகளை நிறைவேற்றுவதும், மக்களுக்கான அனைத்து அடிப்படை உரிமைகளையும் பறிக்கும் வைகையிலும், தொடர்ந்து எழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய பாசிச பாஜக அரசை கூடியவிரையில் தேர்தலில் தோற்க்கடித்து வீட்டிற்கு அனுப்பி வைப்போம் என்று கண்டன உரை நிகழ்த்தினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர்கள் என்.ஏ.தைமிய்யா , ஜே.சீனி முஹம்மது, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் மாநில தலைவர் பம்மல் சலீம், மாநில பொருளாளர் முஹம்மது இக்பால், மனித உரிமை அணி மாநில செயலாளர் சிந்தா மதார், மாநில கொள்கை விளக்க பேச்சாளர் குணங்குடி மீரான், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட