சேலம்.ஆக.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று 30/08/2017 புதன் கிழமை மாலை 8 மணியளவில் மாவட்டச் செயலாளர் A.சாதிக் பாஷா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் U.அமீர் உசேன், மாவட்ட துணைச் செயலாளர்கள் S.சையத் முஸ்தபா, A.ஷேக் ரபி, O.S.பாபு, A.மஹபூப் அலி, A.அம்சத் அலி, வர்த்தக அணி செயலாளர் A.முஹம்மது அலி, தொழிலார் அணி துணைச் செயலாளர் சதாம் உசேன், இளைஞர் அணி செயலாளர் சான் பாஷா மற்றும் அஸ்லம் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING சேலம் மாநகர் மாவட்டம் 31.08.17
தமிழகம்
தமிழகம்
மஜக கோவை மாவட்ட மருத்துவ அணியின் சேவையை பாராட்டிய கோவை அரசு மருத்துவமனை!
கோவை.ஆக.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிர்காக்கும் இரத்ததானம் செய்தார்கள், இச்செயலை பாராட்டி கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் இருப்பிட மருத்துவதிகாரி செளந்திரவேல் அவர்கள் மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு அவர்களிடம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், சிங்கை சுலைமான், மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹீம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 31.08.17
மஜக மாநில செயற்குழு நடைபெறும் இடத்தை பார்வையிட்ட மாநில ஒருங்கிணைப்பாளர்..!
மதுரை.ஆக.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு எதிர்வரும் 16.09.2017 அன்று மதுரையில் நடைபெற உள்ளது. செயற்குழு நடைபெறும் மண்டபத்தை மஜகவின் மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலா M. நாசர் அவர்கள் இன்று பாரிவையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். இதில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் P.M.ஷேக் அகமது அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING மதுரை வடக்கு மாவட்டம். 31.08.17
காயல்பட்டினம் இளைஞரை படுகொலை செய்த குற்றவாளியை கைது செய்ய கோரி மஜக பொதுச்செயலாளர் முதலமைச்சரிடம் தொலைபேசியில் வலியுறுத்தல்..!!
சென்னை.ஆக.30., காயல்பட்டினம் இளைஞர் மீரா தம்பி என்ற சகோதரர் கடந்த சில தினங்கள் முன்பு தனியார் பேருந்தில் பயணம் செய்த பொது சில காயவர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பந்தமாக மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா அவர்கள் மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் எடுத்துக்கூறி விளக்கினார் . இதையடுத்து, மஜக பொதுச்செயலாளர் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினார். கொலைகாரர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களிடமும் பேசியுள்ளார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING சென்னை. 29.08.17
மஜக சார்பாக திரு.வி.க நகரில் தொடர் நிலவேம்பு கசாயம் விநியோகம்..! பொதுமக்கள் பாராட்டு..!!
சென்னை.ஆக.30., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வுகள் வடசென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட திரு.வி.க நகரின் பல்வேறு வட்டங்களில் நடைபெற்றது. கடந்த 20-08-2017 ஞாயிரு காலை 10 மணி அளவில் திரு.வி.க.நகர் பகுதி 72 வது வட்டத்தின் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது, கடந்த 27/08/2017 ஞாயிறு காலை 8.00 மணியளவில் மஜக திரு.வி.க நகர் பகுதி 73வது (மேற்கு) வட்டத்தின் சார்பாக நில வேம்பு கசாயம் வழங்கபட்டது, கடந்த 25-08-2017 (வெள்ளி) காலை 10.30 மணியளவில் மஜக திரு.வி.க நகர் பகுதி 75வது வட்டத்தின் சார்பாக நில வேம்பு கசாயம் வழங்கபட்டது இதில் மாநில துணைச் செயலாளர் சைபுலாஹ், மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகள் அனைத்தும் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் S.A.அஸிம், அன்வர்,A.N.தாஹா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில மருத்துவ சேவை அணி பொறுப்பாளரும், மாநில செயலாளருமான A. சாதிக் பாஷா அவர்கள் கலந்து கொண்டு நில வேம்பு கசாயம் பொது மக்களுக்கு வழங்கினார். இந்த மூன்று நிகழ்வுகளிலும் சுமார் 3,000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் நில வேம்பு கசாயம் குடித்து பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் B.