கடலூர்.ஜன.01., கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேடு நகர பொதுக்குழு கூட்டம் நகர செயலாளர் J. நிஜாமுத்தீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிசம்பர் மாத வரவு செலவு கணக்குகளை நகர பொருளாளர் I. முஹம்மது பைசல் அவர்கள் சமர்ப்பித்தார். இக்கூட்டத்தில் இந்திய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடை மசோதவை கண்டித்து மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் லால்பேட்டை முஸரப் உரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை செயலாளர் V.முஹம்மது ரியாஸ் அவர்கள் கலந்து கொண்டு இக்கூட்டத்தை சிறப்பித்தார். இக்கூட்டத்தில் நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கொள்ளுமேடு_நகரம் #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
தமிழகம்
தமிழகம்
மஜக கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் கிழக்கு பகுதி நிர்வாகிகள் சந்திப்பு..!
கோவை.ஜன.01., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் TMS.அப்பாஸ், மாவட்ட விவசாய அணி செயலாளர் அன்வர், அவர்களை கிழக்கு பகுதி செயலாளர் சமீர், அவர்கள் தலமையில் பகுதி நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் கிழக்கு பகுதியின் அலுவலக திறப்பு விழா, கொடியேற்று விழா, புதிய கிளைகள் அமைப்பு, குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பகுதி பொருளாளர் அபு, துணை செயலாளர்கள் இக்பால், சாதிக் பாட்ஷா, அக்கீம், ஆகியோர் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 31.12.2017
மஜக கோவை கிணத்துக்கடவு பகுதி நிர்வாக கூட்டம்..!
கோவை.ஜன.01., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துகடவு பகுதி நிர்வாக கூட்டம் பொருளாளர் S.A. காதர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில மினவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர், பகுதி செயலாளர் A.ஹாருண் ரஷீது, துணை செயலாளர்கள் அபுதாஹீர், நாசர், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல்ஹக்கீம், தொழிற்சங்க செயலாளர் அக்பர்கான், இளைஞரணி செயலாளர் அசாருதீன், துணை செயலாளர் ஜாபர்சாதிக், மீனவர் அணி செயலாளர் அன்வர்தீன், வழக்கறிஞர் அணி செயலாளர் பாதுஷா, மற்றும் நிர்வாகிகள் முஜிபூர்ரஹ்மான், அப்துல்காதர், ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டார்கள் மேலும் முத்தலாக் விவகாரமாக ஆர்ப்பாட்டம் நடத்த கேள்விகள் எழுப்பப்பட்டன அதில் மாவட்டத்தில் அனுமதியும் பரிந்துரையும் பெற்ற பிறகே முடிவு செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 31.12.2017
ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலை..! தமிழக அரசுக்கு தனியரசு MLA, தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA கூட்டறிக்கை..!!!
(தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA மூவரும் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை) 10 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தோம். முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மா அவர்களிடம் இதுப்பற்றி கூறியபோது கனிவுடன் பரிசீலிப்பதாக கூறியிருந்தார். மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களிடமும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.சி.வி சண்முகம் அவர்களிடமும் இது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அவர்கள் இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தனர். இந்நிலையில் இன்று (31.12.2017)திண்டுக்கல்லில் நடைபெற்ற MGR நூற்றாண்டு விழாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும், 60 வயதை கடந்த கைதிகளையும் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வோம் என மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். கண்ணீரில் வாடிய ஆயிரக்கணக்கான குடும்பங்களிள் வாழ்வில் மாண்புமிகு திரு.எடப்பாடியார்
ரஜினி அரசியல் வருக ! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேட்டி..!!
திருவாரூர்.டிச.31., இன்று திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேட்டில் செய்தியாளர்கள் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து ரஜினிகாந்த அவர்களின் அரசியல் அறிவிப்பு குறித்து பேட்டி எடுத்தனர். அப்போது அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தாவது:- ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமேன்றாலும் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த, கமல்ஹாசன், விஷால் என அனைவருக்கும் உரிமை உண்டு. நல்ல செயல்பாடுகளும், மக்கள் ஆதரவும் இருந்தால் ஆட்சிக்கு வரலாம். 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலுக்கு வருவேன் என பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்த. சகோதரர் ரஜினிகாந்த அவர்கள்,இன்று தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திக்கிறார். அவருக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். கேப்டன் விஜயகாந்த அவர்கள், டாக்டர் கலைஞர் அவர்களும்,டாக்டர் ஜெயலலிதா அம்மா அவர்களும் அரசியலில் வலிமையுடன் செயல்பட்டுக் கொண்டருக்கும் போது துணிச்சலுடன் அரசியல் களம் கண்டார். இன்று ஒரு வெற்றிடம் ஏற்பட்டது போல தோற்றம் உருவாகியாருக்கும் காலக் கட்டத்தில் அவர் அரசியலுக்கு வருவது சந்தேகங்களை உருவாக்குகிறது. அவரது ரசிகர்கள் எல்லோரும் வாக்ககளர்களாக அரசியலில் மாறுவார்களா?என தெரியாது. கழகங்கள் இல்லாத தமிழகம், கவலைகள் இல்லாத தமிழகம் என்ற முழக்கத்தை பாஜக முன் வைத்துள்ள நிலையில் அக்கட்சி தலைவர்கள் போட்டிப்