ஆகஸ்ட்.01., மஜகவின் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர் பாய், அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு, தற்போது கோவையில் உள்ள தனது வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார். இன்று அவரை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் துணைப் பொதுச் செயலாளர் சத்தி.செய்யது முகம்மது பாரூக் அவர்களும் உடன் சென்றார். முன்னதாக MJTS மாநில செயலாளர் கோவை ஜாபர் அலி, மற்றும் கோவை மாநகர மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், ஆகியோரின் தந்தையின் மரணத்தையொட்டி அவரது வீட்டுக்கு அனைத்து நிர்வாகிகளுடன் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் மஜக நிர்வாகி இப்ராகிமை, அவரது இல்லத்துக்கு சென்று நலம் விசாரித்தார். அது போல் கொரோனா முன்கள சேவையில் பாதிக்கப்பட்ட இரட்டை சகோதரர்கள் வளையல் இப்ராஹிம், பாருக், ஆகியோரின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். பிறகு செல்வபுரம் கிளை அலுவலகத்திற்கு வந்து 77 மற்றும் 78 வது வார்டு மஜக நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் பொதுச் செயலாளர் கலந்துரையாடினார். இந்நிகழ்வுகளில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், மாவட்ட
பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி
எழுச்சியோடு நடைபெற்ற மஜக திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி திறந்து வைத்தார்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா மாவட்ட செயலாளர் மஜீத், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாநில துணை செயலாளர் பாபுஷா ஹின்சா, வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி, அவர்கள் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரை வழங்கினார். முன்னதாக துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், அவர்கள் கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட பொருளாளர் கண்ணன், அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட துணை செயலாளர்கள் இப்ராஹிம், ஷேக், ஷேக் ஒலி, நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கமாலுதீன், மாவட்ட பொருளாளர் காலிப், மற்றும் பகுதி, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருப்பூர்_வடக்கு_மாவட்டம் 01.08.2021
அரசியலில் விஷவாயுவை முறியடிக்க வேண்டும்.. மஜக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!
நாகை மாவட்டம் ஆதலையூர் - ஏனங்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 11 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அரசு அறிவுறுத்தலின் படி மாலை 5.30 மணியளவில் எளிய முறையில் சாயுங்கால நிகழ்ச்சியாக நடந்தேறியது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசிய உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.. மஜக ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகளில் இத்தோடு 11 வது ஆம்புலன்ஸை அர்ப்பணிக்கிறோம். ஓட்டு அரசியல், அரசியல் அதிகாரம், தேர்தல் நிலைபாடு ஆகியவற்றை கடந்து சேவை அரசியலை முன்னெடுக்கிறோம். எங்களிடம் உள்ள இளைஞர்களையும், மாணவர்களையும் வீண் உணர்ச்சிகளுக்கு பழக்காமல், அறிவு சார்ந்தவர்களாகவும், முதிர்ச்சி பெற்றவர்களாகவும் உருவாக்குகிறோம். மக்களுக்கு ஈடுபாட்டோடு சேவையாற்றும் எண்ணங்களை அவர்களிடம் ஊட்டுகிறோம். எங்கள் அரசியலின் மிகப் பெரும் சாதனையாக மத நல்லிணக்க சேவையை ஆற்றி வருகிறோம். அரசியலில் இப்போது விஷவாயு வீசத் தொடங்கியுள்ளது. அதை சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதன் மூலம் தான் முறியடிக்க முடியும். நமது தமிழகம் திராவிடத்தாலும், தமிழ் தேசியத்தாலும் பக்குவப்படுத்தப்பட்ட பூமி. இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் மற்றும் தலித்துகளுக்கிடையே உள்ள உறவை நாம் தொடர்ந்து கட்டிக் காக்க வேண்டும். இந்த ஆம்புலன்ஸ் சேவை சாதி, மத, அரசியல் வேறுபாடுகளை கடந்தது. ஒரு பாஜக சகோதரர் அழைத்தாலும் உடனே
கூடலூரில் கன மழை! நிவாரண பணிகளில் களமிறங்கிய மஜகவினர்!
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது கிராமங்களில் எல்லாம் சேர்ந்து அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு தொடர்ந்து மஜக வினர் நிவாரண உதவிகள் செய்து வருகிறார்கள். அதை தொடர்ந்து கூடலூர் புத்தூர் வயல் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்கள் கூடலூர் நகர கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் குமார், அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜோசப், நிசார் பாபு, கூடலூர் நகர செயலாளர் ஜீவா, நகர பொருளாளர் அப்துல் மஜீத், நகர துணைச் செயலாளர்கள் விஜயன், ஹரி, மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_மேற்கு_மாவட்டம் 26.07.2021
தமிழகத்தில் புதிய ரயில் பாதைகளை உருவாக்க வேண்டும்! ஒன்றிய அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்..
திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பொதக்குடிக்கு வருகை தந்தார். அவருடன் துணைப் பொதுச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி, மாநில செயலாளர் நாச்சிகுளம் . தாஜூதீன் ஆகியோரும் வருகை தந்தனர். அப்போது அருகில் உள்ள ஆய்குடி கிராமத்தில் அவ்வூர் மக்கள் தாங்கள் கட்டி வரும் காளியம்மன் கோயிலை பார்வையிட வருமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று, பொதுச் செயலாளர் அங்கு வருகை புரிந்தார். அவரை அப்பகுதி மக்கள் வரவேற்று மஜகவினர் அப்பகுதிகளில் ஆற்றி வரும் சேவைப் பணிகளை சிலாகித்து கூறினர். பிறகு பொதக்குடி மஸ்ஜிதில் ஜமாத்தினர் சார்பில் நடைப்பெற்ற வரவேற்புடன் கூடிய கலந்துரையாடலிலும் பங்கேற்றார். பிறகு காலம் சென்ற முன்னாள் மஜக நிர்வாகி கமால்தீன் அவர்களின் மகள் நஃபிலா நஸ்ரினின் திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களுக்கு, அவரும், தலைமை நிர்வாகிகளும் வாழ்த்து கூறினர். பிறகு பொதக்குடி மஜக அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. அதில் பொதுச் செயலாளர் கூறியதாவது... காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் நிறைவுற்ற நிலையில், அங்குள்ள தேவைகளை பூர்த்தி செய்து விரைந்து ரயில் போக்குவரத்தை ஒன்றிய அரசு தொடங்க வேண்டும். அது போல் வேதாரண்யம்