சென்னை., ஜன.30 மனிதநேய ஜனநாயக கட்சி-யின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களை மஜகவில் இணைத்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக சென்னை, துறைமுகம் பகுதியில் தமிழ்த்தாய் சுய உதவி குழு என்ற மகளிர் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இக்குழுவை சேர்ந்த பெண்கள் குழுவின் தலைவி விஜயகாந்தி தலைமையில் திரளானோர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் துறைமுக பகுதி நிர்வாகிகள் அசன் அலி, அபூபக்கர், தாஹா, ராயபுரம் பகுதி நிர்வாகி தமீம் அன்சாரி ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #MJK2021 #மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம். 30.01.2021
உறுப்பினர் சேர்க்கை
அத்திக்கடையில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்! அத்திக்கடையில் கிடைத்த அத்திப்பழங்கள் என பொதுச்செயலாளர் பேச்சு..!
ஜன.10, இன்று திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் பெருந்திரளான எண்ணிக்கையில் இளைஞர்களும், மாணவர்களும் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., முன்னிலையில் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து கட்சி முழக்கங்கள் அதிர பொதுச் செயலாளர் அவர்கள் கொடியேற்றி, அலுவலகத்தையும் திறந்து வைத்தார். அப்போது அத்திக்கடையில் எங்களுக்கு கிடைத்த அத்திப்பழங்கள் என புதியவர்களை வரவேற்று பேசினார். அங்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பிறகு ஜமாத் அழைப்பை ஏற்று அவர்களது அலுவலகத்திற்கு சென்று உரையாடினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட துணைச் செயலாளர் நத்தர் கனி, மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் லியாக்கத் அலி, கிளை செயலாளர் பைசல் உள்ளிட்ட திரளானோர் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
இளைஞர்களை ஈர்க்கும் மஜக !
திருவண்ணாமலை.ஜனவரி.09., மனிதநேய ஜனநாயக கட்சி-யின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களை மஜகவில் இணைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரத்தை சேர்ந்த இளைஞர்கள் மாவட்டச் செயலாளர் காஜா ஷரிப் முன்னிலையில் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். பின்னர் மாவட்டச் செயலாளர் அவர்கள் மஜகவில் புதியதாக இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கைளை விளக்கி பேசினார். இந்நிகழ்வுக்கு நகர செயலாளர் பாபுலால் தலைமை தாங்கினார், மேலும் நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING. #திருவண்ணாமலை_மாவட்டம். 10.01.2021
தூத்துக்குடி வடக்கில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்! மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது துவக்கி வைத்தார்!
தூத்துக்குடி:ஜன04., மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்திற்குட்பட்ட அய்யனார் ஊத்து கிளையின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மஜக வின் அய்யனார் ஊத்து கிளை செயலாளர் செய்யது அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பெரியவர்கள் என பலரும் ஆர்வத்தோடு வந்து உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு மஜக வின் சேவை அரசியலில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முகமது, தாரிக், சதாம் உசேன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் முகமது நஜிப், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப், முஜிபுர் ரஹ்மான், மற்றும் மானங்காத்தான் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அய்யனாரூத்து கிளை பொருளாளர் சாகுல் ஹமீது, தலைமையில் துணை செயலாளர்கள் செய்யது இப்ராகிம், மைதீன், மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தூத்துக்குடி_வடக்கு_மாவட்டம் 03.01.2020
எடையூர் சங்கேந்தியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்! மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் பங்கேற்பு!!
ஜன.02, திருவாரூர் மாவட்டம் எடையூர்-சங்கேந்தியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதில் திராளானோர் பங்கேற்று தங்களை மஜகவின் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை செயலாளர் அன்வர் ராஜிக் அவர்கள் தலைமையில் பொருளாளர் தௌலத் முகமத், சேக்தாவூத், நஸீர் ஆகியோர் செய்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 01.01.2021