மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தமிழக தலைவர் முகம்மது இஸ்மாயில் அவர்கள் மரணம் அடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியல் களத்துக்கு வந்த அவர், தனது 60 ஆண்டு கால பொது வாழ்வில் எளிமையானவர், நேர்மையாைவர் என்ற புகழுடன் விடை பெற்றிருக்கிறார். முன்னாள் ஜனதா தள பிரதமர்கள் மொரார்ஜி தேசாய், வி.பி. சிங், சந்திரசேகர், தேவகவுடா ஆகிய பிரதமர்களுக்கு மிகவும் நெருக்கமான தமிழக தலைவராக திகழ்ந்தார். இந்திய அரசியலில் உச்சத்திலிருந்த தலைவர்களான ஜார்ஜ் பெர்ணாண்டஸ், மது தண்டவதே, ராமகிருஷ்ண ஹெக்டே மற்றும் எஸ் ஆர் பொம்மை ஆகியோருடன் சம காலத்தில் தேசிய அரசியலில் பயணித்த ஆளுமையாளர் என்பது அவரது சிறப்புகளை வரிசைப்படுத்துகிறது. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, 1980 ல் பத்மனாபபுரம் தொகுதியிலிருந்து MLA வாக தேர்வாகி சிறப்புடன் செயல்பட்டார். MGR அவர்களுக்கு மிகவும் நெருக்கமான தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் 1991 மற்றும் 1996 ல் ஜனதாதளம் கட்சியின் சார்பில் இரு முறை போட்டியிட்டார். ஐந்தாண்டுகள் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்த அவர், ஜனதாதளத்தின் சிதறல்களுக்கு பிறகு மதச்சார்பற்ற ஜனதாதளம்
இரங்கல்
மனிதநேயம் கொண்ட பஹ்ரைன் பிரதமர் மறைவு! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி_MLA இரங்கல்!
பஹ்ரைன் நாட்டின் பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்கள் அமெரிக்க மருத்துவமனையில் மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். உலகில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற சிறப்பு இவருக்குண்டு. இவர் ஐம்பது ஆண்டுகளாகப் பிரதமர் பொறுப்பை வகித்து பல நாடுகளுடன் நல்லுறவை பேணியவர். இந்தியாவை மிகவும் மதித்தவர். தமிழர்களையும், மலையாளிகளையும் கொண்டாடியவர். பஹ்ரைனில் அவர்கள் ஆற்றி வரும் உழைப்பை மதித்தவர். இவரது மனித நேயத்திற்கு ஒரு நிகழ்வை உதாரணம் கூறலாம். 2016 ம் ஆண்டு ஒரிசாவில் டனா மஜ்ஹய் என்ற பழங்குடி விவசாயி, இறந்த தன் மனைவியின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு, பல கிலோமீட்டர் நடந்து சென்று அடக்கம் செய்தார் என்ற செய்தியை படித்து கலங்கியுள்ளார். உடனே பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, அந்தக் குடும்பத்திற்கும் அவரது பிள்ளைகளுக்கும் உதவியதோடு, அவ்வூருக்கு ஒரு மருத்துவ சேவை வாகனத்தையும் வழங்கினார். அவரது இரக்க உணர்வு, மனிதாபிமானம் ஆகியன எல்லை கடந்ததாக இருந்தது. 2019 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (WHO) அவரை சுகாதாரத் துறையில் உலகத் தலைவராக அறிவித்தது. அப்பணியை அவர் சிறப்புற செய்தார். பல
அமைச்சர் துரைக்கண்ணு இல்லத்தில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆறுதல்!
அமைச்சர் துரைக்கண்ணு இல்லத்திற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவரது இழப்பு தனக்கும், மஜகவினருக்கும் பெரும் வருத்தத்தை தருவதாகவும் கூறினார். இங்குள்ள ஜமாத்தினருக்கும், எங்களுக்கும் உள்ள உறவு அவரது தாத்தா காலத்திலிருந்து தொடர்வதாகவும், அதனால்தான் அவர் நலம் பெற இங்குள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றதாகவும் அவர்களின் குடும்பத்தினர் கூறினர். அவர் பங்காரு அடிகளாரின் பக்தராகவும், வேளாங்கண்ணி பேராலயத்திற்கு செல்லக் கூடியவராகவும், சுற்றுவட்டார தர்ஹா நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்க கூடியவராக இருந்தார் என்றும் அங்குள்ளவர்கள் கூறினர். கொரோனா அச்சுறுத்தலையும் மீறி பொதுமக்கள் அவரது உடலை பார்க்க திரண்டதற்கு இதுதான் முக்கிய காரணம் என்று அவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இச்சந்திப்பில் பொதுச் செயலாளருடன், மாநிலச் செயலாளர் ராசுதீன், மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ், அமீரக செயற்குழு உறுப்பினர் யூசுப் ஷா, மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது அலி, ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி மற்றும் அப்பகுதி மஜக நிர்வாகிகளும் உடன் சென்றனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம். 02/11/2020
எளிமையும் இனிமையும் கலந்த மனிதர் அண்ணன் துரைக்கண்ணு! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் துரைக்கண்ணு அவர்கள் நேற்றிரவு காலமானார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் , உயர் தர சிகிச்சை மூலம் எப்படியும் மீண்டு வந்து விடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் மரணமடைந்துள்ளார் என்பது அனைவரின் இதயங்களையும் கனக்க செய்கிறது. பதவியில் இருந்த போதும் பணிவுடன் பணியாற்றியதும், பார்க்கும் எல்லோரிடமும் புன்னகையை உதிர்த்து கோரிக்கைகளை எதிர்கொண்டதும் அவரை எளிமையும், இனிமையும் கொண்ட நல்ல அரசியலாளராக மக்களிடம் கொண்டு சென்றது. அதன் காரணமாகவே பாபநாசம் தொகுதி மக்கள் அவரை தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெறச் செய்தனர். சாதி, மத , அரசியல் பாகுபாடின்றி அவர் எல்லோரிடமும் உளப்பூர்வமாக பழகினார். கனிவுடன் அனுகினார். அய்யம்பேட்டை, பண்டார வடை, ராஜகிரி, வழுத்தூர் போன்ற பகுதிகளில் அவரை தங்கள் உறவினர்களில் ஒருவராக மக்கள் கொண்டாடினர். இதை அவர் அடிக்கடி என்னிடம் சொல்லி மகிழ்வார். மனிதநேய ஜனநாயக கட்சியினர் மீது அவர் மிகுந்த அன்பு காட்டினர். அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துவார். அவரோடு இடைதேர்தல் களில்
அமமுக பொருளாளர் வெற்றிவேல் மரணம்!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு.வெற்றிவேல் அவர்கள் கொரோனா தொற்று கிசிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். சட்டமன்றத்தில் எங்களோடு துடிப்பாக செயல்பட்ட அவர், அரசியல் மாற்றங்களில் தனது பதவியை இழந்து எங்களோடு தொடர்ந்து பயணிக்க முடியாமல் போனார். ஒரு முறை சட்டமன்றத்தில் அவருக்கும், எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது நான் எழுந்து சென்று, இரு தரப்புக்கு இடையே மோதல் நிகழாத வண்ணம் நிலைமையை சீராக்கினேன். அந்த நிகழ்வுக்கு பிறகு அவர் நெருங்கிய நண்பரானார். அவர் அமமுகவின் பொருளாளராக பணியேற்று அக்கட்சியின் வளர்ச்சியில் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தார். துணிச்சல் மற்றும் செயல்திறன் மிக்க அரசியல்வாதியாக அறியப்பட்டார். தற்போது கொரோனா தொற்று காரணமாக அவர் பெற்று வந்த கிசிச்சை பலனின்றி, இறந்திருப்பது துயரத்திற்குரியதாகும். நீண்ட காலம் அரசியலில் பணியாற்றிட வேண்டியவரின் பயணத்தில் கொரோனா நோய் முற்றுப்புள்ளியாய் விழுந்தது வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அண்ணன் TTV. தினகரன் உள்ளிட்ட அமமுக வினருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்