மனிதநேய ஜனநாயக கட்சி சிவகங்கை மாவட்ட இளையான்குடி நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், அவை தலைவர் நாசர் உமரி, இணை பொதுச் செயலாளர் J.S.ரிபாயி, மாநில துணை செயலாளர் பொறியாளர் சைபுல்லாஹ், ஆகியோர் பங்கேற்று இளையான்குடி நகரத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இந்நிகழ்வில் நகர, அணி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சிவகங்கை_மாவட்டம்
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
மனிதநேயம் காப்போம்! புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுக்குழுவில் மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது பேச்சு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் கறம்பக்குடியில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இதில் பேசிய மாநில பொருளாளர் மஜக வின் பணிகள் மற்றும் கடந்து வந்த பாதை களை சுட்டிக்காட்டி மஜக வினர் உயிர் தியாகத்திலும் மனிதநேயம் மற்றும் ஜனநாயகம் காப்பவர்கள் என்று பேசினார். அதை தொடர்ந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். மேலும் மாநில துணைச்செயலாளர் துரை முஹம்மது, விவசாய அணி மாநில செயலாளர் பேரை அப்துல் சலாம், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். முன்னதாக நிகழ்ச்சியை தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், கொடி ஏற்றி துவக்கி வைத்தார்கள். இதில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, விவசாய அணி மாநில துணை செயலாளர் ஷேக் இஸ்மாயில், தலைமை செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட துணைச்செயலாளர் லெட்சுமணன் அவர்கள் வரவேற்புரை நிழ்த்தினார். மக்கள் நலன் சார்ந்த
பல்லாவரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்பு!
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று பரவலாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு நிகழ்வாக மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக போலீசாரின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நகர செயலாளர் ஷானவாஸ் தலைமையில் பல்லாவரத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். பொருளாளர் உடன் மாநில துணைச் செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி, மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகிர், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தாரிக் ஆகியோர் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் தில்சாத், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் சமது, முகம்மது அஜீஸ், ஷாஜஹான், ECR
வசீம் அக்ரம் படுகொலை விவகாரம் DGP உள்ளிட்டோருடன் சந்திப்பு.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு..
வாணியம்பாடியில் படுகொலை செய்யப்பட்ட மஜக சகோதரர் வசீம் அக்ரம் வழக்கு தொடர்பாக இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், அவருடன் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா ஆகியோரும் இன்று DGP அலுவலகம் சென்றனர். காவல் துறை இயக்குனர் திரு.சைலந்திர பாபு அவர்களிடம் எஞ்சிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவது குறித்தும், வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறித்தும் மனு ஒன்றை பொதுச் செயலாளர் அவர்கள் கையளித்தார். பிறகு உளவுத் துறை ADGP திரு.டேவிட்சன் ஆசிர்வாதம், உளவுத் துறை IG திரு.ஈஸ்வர மூர்த்தி ஆகியோரையும் சந்தித்து பேசினர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 13.09.2021
வாணியம்பாடி வசீம் அக்ரம் படுகொலை..!!நல்லடக்கத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வாசிம் அக்ரம் அவர்கள் நேற்று இரவு சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடைய ஜனாசா தொழுகை இன்று (11.09.2021) வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி திடலில் நடைபெற்றது அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அவருக்காக பிரார்தித்தனர். இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரசீது மற்றும் அவைத்தலைவர் S.S.நாசர் உமரி, துணை பொதுச்செயலாளர்கள் சையத் பாருக் அஹ்மத், மண்டலம் ஜெய்னுல் ஆப்தின் ஆகியோர் கலந்து கொண்டனர், ஜனாசா தொழுகைக்கு பின் வசீம் அக்ரம் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்கள். உடன் மாநில துணைச்செயலாளர் அப்சர்சையத், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜஹிருல் ஜமா, வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பத்தூர்_மாவட்டம் 11.09.2021