சென்னை.பிப்.13., நேற்று (12_02_17) மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு மாலை 6 மணிக்கு மதுசூதனன், அமைச்சர் மா.பாண்டியராஜன் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அனைவரையும் வரவேற்றார். உடன் பொருளாளர் ஹாரூன் ரஷீது, அவைத்தலைவர் மவ்லானா.நாசர் உமரி, மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜுதீன், சாதிக் பாஷா ஆகியோர் உடனிருந்தனர். முதல்வர் திரு.O.பன்னீர் செல்வம் அவர்களுக்கு ஆதரவு கேட்டு வந்ததாக கூறினர்.இது குறித்து மஜக தலைமை நிர்வாகக்குழு எடுத்திருக்கும் முடிவு குறித்து அவர்களிடம் பொதுச்செயலாளர் விளக்கினார். இன்றைய அரசியல் நிலவரம் குறித்து மனிதநேய ஜனநாயக கட்சி கூர்ந்து கவனித்து வருவதாகவும், இப்போதைக்கு எந்த முடிவும் இல்லையென்றும்,தங்கள் கோரிக்கையை தலைமை நிர்வாகக் குழு கவனத்தில் கொள்ளும் என்றும் கூறப்பட்டது. தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி(MJK IT-WING) 12_02_17
செய்திகள்
நாகப்பட்டினம் தொகுதியில் மக்கள் கருத்தாய்வு! தமிமுன் அன்சாரி MLA முடிவு!
சென்னை.,பிப்.12., தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளது. தற்போது அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நீடிக்கிறது வருத்தமளிக்கிறது. மக்களிடம் கருத்துக் கேட்க முடிவு செய்துள்ளேன். நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறலாம். நாகையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 13.02.17 திங்கள் கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பெட்டியில் உங்கள் கருத்துக்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இவண், M. தமிமுன் அன்சாரி MLA, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர். பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 12.02.17.
நியூஸ் 18 தொலைக் காட்சிக்கு மஜக பொதுச் செயலாளர் பேட்டி…
சென்னை.பிப்.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இன்று மதியம் நியூஸ்18 சேனலுக்கு சிறப்பு பேட்டியளித்தார் அதில் கூறியதாவது... * நான் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில்தான் தங்கியுள்ளேன். * தமிழக அரசியலில் மத்திய அரசு குழப்பம் செய்கிறது. * அதிமுகவை பிளக்க பாஜக முயற்ச்சிக்கிறது. *அதிமுகவின் இருதரப்பும் உட்கார்ந்து பேச வேண்டும். *அதிமுக பிளவுப்படக் கூடாது. * கவர்னர் விரைவில் முடிவெடுக்க வேண்டும். என பேட்டியளித்தார்... தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி ( MJK IT-WING) சென்னை. 11.02.2017
மஜக தலைமையகத்தில் செங்கோட்டையன்…
சென்னை,பிப்.11.,மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் நேற்று இரவு 9 மணி வரை தலைமை நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு தற்போதைய அரசியல் நிலைமை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் புதிய அவைத்தலைவர் செங்கோட்டையன் அவர்கள் மஜக தலைமையகத்திற்கு இரவு 10 மணியளவில் வருகை தந்து, தங்களது அரசியல் செயல்பாடுகளை எடுத்துக் கூறினார். மனிதநேய ஜனநாய கட்சியின் ஆதரவு தங்களுக்கு தேவை என்றும் கோரினார். தற்போதைய மஜகவின் நிலைப்பாடு குறித்து அறிக்கை நகல் அவருக்கு வழங்கப்பட்டது அவரது வேண்டுகோள் குறித்து தலைமை நிர்வாகம் கவனத்தில் கொள்ளும் என்றும் கூறப்பட்டது. தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) தலைமையகம்,சென்னை 11.02.17
மஜக திருவல்லிக்கேணி சேப்பாக்கம் பகுதி ஆலோசனைம் கூட்டம்…
சென்னை.பிப்.10., *மத்திய சென்னை மாவட்டம்* திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் பகுதி *மனிதநேய ஜனநாயக கட்சி*யின் ஆலோசனை கூட்டம் 09/02/2017 மாலை இஷா தொழுகைக்கு பிறகு *மாவட்ட செயலாளர்* A.முஹம்மது ஹாலித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு *மாவட்ட பொருளாளர்* M.Y.பிஸ்முல்லாகான், *மாநில செயற்குழு உறுப்பினர்* M.R.அன்வர் தீன், மாவட்ட துணை செயலாளர் M.H.பீர் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்கள். இந்த கூட்டத்தில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதியின் பொருப்புக்குழு கலைக்கப்பட்டு *புதிய பகுதி நிர்வாகிகள்* ஏகமனதாக *தேர்வு* செய்யப்பட்டனர். *பகுதி செயலாளர்* P.M. பஷீர் அஹமது B.sc., *பகுதி பொருளாளர்* R.அசன் *பகுதி துணை செயலாளர்கள்* 1) A. சலீம் அலி 2) முஹம்மது சல்மான் 3) இஷாக் மேற்கண்ட புதிய நிர்வாகத்திற்கு மாநில தலைமை அங்கீகாரம் வழங்க *மாவட்ட செயலாளர்* வாயிலாக உரிய முறையில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது... தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) மத்திய சென்னை. 09.02.2017