மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகர ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஏ.கே.ஷாநவாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் செய்யது அகமது பாருக், அவர்கள் கலந்து கொண்டு போராட்ட பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார். இக்கூட்டத்தில் திரளான மக்களை போராட்டத்திற்கு அழைத்து செல்வது எனவும், வீடு தோறும் சென்று போராட்டம் குறித்து பரப்புரையில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, நகர நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.. #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 26.12.2021
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
ஜனவரி 8 கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம்! மஜக கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M. சுல்தான், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக MJTS தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் MH. ஜாபர் அலி, அவர்கள் கலந்து கொண்டு ஜனவரி 8 சிறை முற்றுகை போராட்டம் குறித்து பல்வேறு பணிகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைளை வழங்கினார். மேலும் முற்றுகை போராட்டம் தொடர்பான வாகன ஸ்டிக்கர்கள்,நோட்டீஸ், ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார். கூட்டத்தில் சிறை முற்றுகை போராட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்டம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் A. ஷேக் மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் காஜா மைதீன், முகமது நிவாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் M. ஆரிஃப் அப்பாஸ், N. மகேந்திரன், NMT. முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாரிஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. #கோவையில்திரள்வோம் #நீதியைவெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_வடக்கு_மாவட்டம் 24.12.2021
NTF தலைமை நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ்..!
சென்னை.ஜன.04., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8 அன்று "சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. அது தொடர்பாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து போராட்டத்திற்கான அழைப்பிதழ்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு நிகழ்வாக இன்று சென்னையில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு - (NTF) மாநில பொருளாளர் ஜாஹிர் ஹூசைன், துணைப் பொதுச்செயலாளர் கமருதீன் ஆகியோரை நேரில் சந்தித்து மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் ஜனவரி 8 மத்திய சிறை முற்றுகைக்கான அழைப்பிதழை வழங்கினார். அவர்களுடன் NTF சென்னை மண்டல செயலாளர் நிசார் அஹமது, சென்னை மண்டல துணைச் செயலாளர் பீர் முஹம்மது ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் நாகை மாவட்டம், நாகூரில் NTF-ன் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அவர்களை மஜக நாகை மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதின் அவர்கள் சந்தித்து போராட்டத்திற்கான அழைப்பிதழை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், தலைமை
கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் அவர்களிடம் மஜக சார்பில் கோரிக்கை மனு..
கடலூர்.ஜன.04., 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8, 2022 அன்று கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. இதனிடையே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் ஆங்காங்கே மஜக வினர் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேசிட இன்று முதல் மனு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜனவரி 5 அன்று தமிழக சட்டமன்றம் கூட விருப்பதால், இக்கோரிக்கையை சட்டமன்றத்தில் எழுப்பு மாறும், குரலற்ற அம்மக்களுக்கு குரல் கொடுக்க கோரிய கோரிக்கை மனுவை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஐயப்பன், MLA., அவர்களை மஜக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் மன்சூர், தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து கையளித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் அஜ்மீர் கான், நகர பொருளாளர் ஹாருண்ரஷீத், நகர துணைச் செயலாளர் உமர் பாரூக், ஆகியோர் உடனிருந்தனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கடலூர்_வடக்கு_மாவட்டம் 04.01.2022
அரியலூர் மாவட்டத்தில் மஜக துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் நேரில் ஆய்வு!
கோவை மத்திய சிறை முற்றுகை போராட்ட பணிகள் அரியலூர் மாவட்டத்தில் எழுச்சியாக நடைப்பெற்று வருகிறது. மனிதநேய ஜனநாயக கட்சியின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகளை ஜெயம்கொண்டத்தில் துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் சந்தித்து பணிகளை கேட்டறிந்தார். பிறகு கோவை சிறை முற்றுகை போராட்டத்தின் விளம்பர பணிகள் மற்றும் மக்களை திரட்டும் பணிகள் பற்றி கேட்டறிந்து ஆலோசணைகள் வழங்கி முழுவீச்சில் பணிகளை முடுக்கிவிட்டார். பிறகு ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து போராட்ட அழைப்புவிடுத்தார். இம்மாவட்டத்தில் பரவலாக சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் ஆதரவு பெருகியுள்ளது. அதிகமானோரை திரட்ட இம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து களப்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிகழ்வில் மாவட்ட செயலாளர் அக்பர், மாவட்ட பொருளாளர் B.சர்புதீன் மாவட்ட துனை செயலாளர்கள் E.முகம்மது அலி, M.சேக் இஸ்மாயில், MJTS மாவட்ட செயலாளர் M.செய்யது பாரூக், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் K.யாஹிம் கான் ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #அரியலூர்_மாவட்டம் 03.01.2022