( மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு ) மீண்டும் தமிழ்நாடு இளம் தமிழ் போராளிகளால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னெழுச்சியாக பங்கேற்ற மாணவர்-இளைஞர் சமூகம், பின்னர் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டத்தையும் வழி நடத்தியது. சந்தைப் பொருளாதார யுகம், தகவல் தொழில்நுட்ப மோகம் என உலகம் மாறிய தருணத்தில் 1990 முதல் 2010 வரை இருபது ஆண்டுகள் மாணவர் போராட்டங்கள் காணாமல் போயின. 2010ல் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து மீண்டும் மாணவர் சமூகம் சோம்பல் முறித்து களமிறங்கியது. லயோலா கல்லூரி மற்றும் புதுக்கல்லூரி மாணவர்கள் மூட்டிய நெருப்பு தமிழ்நாட்டை அனலாக்கியது. தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் சமூக இணைய தளங்களின் வழியாக தன்னெழுச்சியாக மாணவர்கள்-இளைஞர்கள் அணிதிரண்டு அனைவரையும் அதிர வைத்தனர். அது மதுரை, நெல்லை, கோவை என தொடங்கி எங்கும் பற்றியிருக்கிறது. இது வரவேற்கத்தக்க புரட்சிகர போக்காகும். பொது விவகாரங்களில் மாணவர்களும், இளைஞர்களும் களமிறங்கினால் நேர்மையான அரசியலும், நாகரிகமான பொதுவாழ்வும் வலுப்பெறும். நேர்மையான தலைவர்கள் வலிமைப்பெறவும், புதிய தலைவர்கள் உருவாகவும் வழிப்பிறக்கும். எனவே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள்,
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
SIOவின் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் தமீமுன்_அன்சாரி Mla கலந்து கொண்டு சிறப்பித்தார்.
SIO (Student’s Islamic Organization of India) சார்பாக சென்னை காமராஜர் அரங்கில் 26/10/2016 அன்று நடைபெற்ற 2016 ஆம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கு கல்வியாளர் அஃப்ஸல் ஹூஸைன் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாகை சட்டமன்ற உறுப்பினர் திரு.M.தமீமுன் அன்சாரி MLA அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினர். உடன் மாணவர் இந்தியாவின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் : மஜக ஊடகபிரிவு
காவேரி ரயில் மறியல் போராட்டம் சென்னையில் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் தலைமையில் தடையை உடைத்த மஜகவினர்…
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகளின் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் 17, 18 தேதிகளில் நடைபெறும் என அறிவித்திருந்தனர்... தமிழகம் முழுவதும் நடைபெறும் இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பங்கேற்பர் என அறிவிக்கப் பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமயில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு பீச் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயிலை மறித்தனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டு நூற்றுக்கணக்கான போலீஸார் அரண் போல் நின்று கொடுத்த பாதுகாப்பு வளையத்தை உடைத்து உள்ளே சென்ற போது சற்று பதட்டமான சூழ்நிலை உருவானது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக மண்ணடி ஈத்கா மசூதி அருகிலிருந்து புறப்பட்ட மஜகவினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது " உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து மத்தியில் ஆளும் பாஜக அரசு உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் ஜா தலைமையிலான நிபுணர் குழு அளித்த அறிக்கை தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் ஒருதலைப் பட்சமான அறிக்கையாகவே உள்ளது. பாஜக அரசு அமைத்த
மாணவர் இந்தியா சார்பில் கட்டுரை ஓவிய போட்டிகள்..
கடலூர் வடக்கு மாவட்ட மாணவர் இந்தியா(பதிவு செய்யப்பட்டது) சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி A.P.J அப்துல் கலாம் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணிவிகளுக்கு கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் A.ரியாஸ் ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்ராக அரிமா சங்க தலைவர் திரு. C. லட்சுமிநாராயணன், செயலாளர் திரு. R.அன்வர்தீன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்ப்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.S.A.ஜேக்கப், உடற்கல்வி இயக்குநர் திரு. அசோகன் சிறப்பாக செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மாணவார் இந்தியா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். தகவல்: மஜக ஊடகப் பிரிவு கடலூர் வடக்கு மாவட்டம்.