தஞ்சை.ஜூலை.22., தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சக்கரா பள்ளியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 57 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. நேற்று அப்பகுதியை பார்வையிட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MடA அவர்கள், அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி வருகை தந்தார். அவருடன் மாநில செயலாைர்கள் நாச்சிகுளம் தாஜூதீன், ராசுதீன், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) செயலாளர் யூசுப் ராஜா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை.முபாரக், கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் காதர் பாட்ஷா உள்ளிட்டோரும் வருகை தந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று எரிந்த வீடுகளை பார்வையிட்ட பிறகு, மண்டபத்தில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர். அங்கு ஜமாத்தினரும், அதிகாரிகளும் வரவேற்று நிலைமைகளை விளக்கினர். இது குறித்து முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்வதாகவும், உரிய இழப்பிடு பெற்று தர மாவட்ட நிர்வாகத்திடம் பேசுவதாகவும் பொதுச் செயலாளர் அவர்கள் கூறினார். தகவல்; மஜக தகவல் தொழில் நுட்பஅணி #MJK_IT_WING தஞ்சை வடக்கு மாவட்டம். 22.07.17
Author: admin
புதிய குடியரசு தலைவருக்கு மஜக வாழ்த்து!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) இந்திய திருநாட்டின் 14- வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் . அவர் இதற்கு முன்பு ஒரு இயக்கத்தின் கொள்கையை முன்னிறுத்துபவராக இருந்திருக்கலாம். அதுவே அவருக்கு எதிரான விவாதங்களை கூர்மையாக்கியது. நேற்று முதல் பல்வேறு சாதி , மதங்கள் , இனங்களை சேர்ந்த 125 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்தையும் , பன்மை கலாச்சாரம் கொண்ட தேசத்தின் குடியரசு தலைவர் என்ற அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார். அதை உணர்ந்து அனைத்து மாநில மக்களின் உணர்வுகளையும், பல்வேறு சமூக மக்களின் பண்பாடுகளையும் அரவணைத்து, மதிக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, அவருக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண் ; M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 21.07.2017
மஜக பொதுச் செயலாளர் இல்லத்துக்கு முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் வருகை!
வேதாரண்யம்.ஜூலை.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இல்லத்திற்கு , முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர் MLA அவர்கள் வருகை தந்தார். இருவரும் சென்னை புதுக்கல்லூரியில் படித்தவர்கள் என்பதும் , அபுபக்கர் அவர்கள் சூப்பர் சீனியர் என்பதும் , இருவரும் 20 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருந்து வருவதும் , குறிப்பிடத்தக்கது. தற்போது அரசியல் ரீதியாக வெவ்வேறு அணியிலும் , கட்சியிலும் இருந்தாலும் அதையும் தாண்டி சட்டசபை நிகழ்வுகளில் ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான வகையில் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளும் அளவுக்கு நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அபுபக்கர் அவர்களுடன் , தளபதி ஷபிக்குர் ரஹ்மான் ஹஜ்ரத் , மக்கீன் உள்ளிட்ட IUML -ன் நிர்வாகிகளும் வருகை தந்தனர். இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் H.சேக் அப்துல்லாஹ் , நாகை தெற்கு மாவட்ட துணை செயலாளர் அ.ஷேக் மன்சூர் மற்றும் வேதாரண்யம் நகர மஜக நிர்வாகிகளும் உடனிருந்தனர். தகவல்: மஜக தகவல் தொழில் நுட்ப அணி #MJK_IT WING வேதை - நகரம் நாகை தெற்கு மாவட்டம்.
மஜக பொதுச் செயலாளருடன் செட்டியார் சமுதாய தலைவர்கள் சந்திப்பு!
சென்னை.ஜூலை.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, அவர்களை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் செட்டியார் சமுதாய தலைவர்கள் கடந்த 18.07.2017 அன்று சந்தித்து உரையாடினர். 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவைத் தலைவர் ஜெகனாத் மிஸ்ரா தலைமையில் ஒரு குழு தங்கள் சமுதாய கோரிக்கைகளை கொடுத்தனர். MBC பிரிவில் தங்கள் சமுதாயத்தை சேர்க்க, சட்டபையில் பேசும் படி கோரிக்கை விடுத்தனர். இதற்குரிய பணிகளை மேற்கொள்வதாக பொதுச்செயலாளர் வாக்குறுதி கொடுத்து, அவர்களது பல்வேறு கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.. தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING 20.07.2017
நாகை அரசு மருத்துவமனையில் தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆய்வு!
நாகை. ஜூலை.20., நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஒரு வருடத்தில் அவர் இங்கு ஆய்வு மேற்கொள்வது இது ஐந்தாவது முறையாகும். அப்போது நிலைய மருத்துவ அலுவலர் Dr.முருகப்பன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியேர்களிடம் மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து விசாரித்தார். MRI ஸ்கேன் உள்ளிட்ட ஒன்பது புதிய அறிவிப்புகளை நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழக அரசிடம் இருந்து பெற்றுத்தந்ததர்காக அவர்கள் நன்றியை தெரிவித்தனர். மேலும் MLA நிதியிலிருந்து குடிநீர் சுத்தகரிப்பு செய்து கொடுத்த காரணத்தால், மருத்துவமனையில் தற்போது 30 இடங்களில் குடிநீர் குடுவைகள் நோயாளிகள் வசதிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகளின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு தவறுகள் நடைபெறாத அளவுக்கு பணிகள் நடைபெறுவதையும் சுட்டி காட்டினர். பிறகு MLA அவர்கள், அவசர சிகிச்சை பிரிவு, பிறந்த குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, பிரசவ பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். பிறகு நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். விஜயலெட்சுமி என்ற பெண்மணி மருத்துவமனை சுத்தமாக இருப்பதாகவும், துர்நாற்றம் இல்லையென்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் நல்ல முறையில் கவனித்து