கோவை.ஆக.21., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கோவை தெற்குப் பகுதி ஆலோசனைக் கூட்டம் பகுதி செயலாளர் காஜா தலைமையில் பகுதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பகுதி நிர்வாகிகள் நிவாஸ், ஜாபர், ஜக்கரியா, யூசுப், அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இதில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, எதிர் வரும் 25.08.17 வெள்ளிக் கிழமை அன்று தெற்கு பகுதியில் செயற்குழு கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 20.08.17
Author: admin
நூல் விமர்சனம்! “உருவாகாத இந்திய தேசியமும் , உருவான இந்து பாசிசமும்”
ஐயா. பழ.நெடுமாறன் எழுதிய படிக்க வேண்டிய நூல்! “உருவாகாத இந்திய தேசியமும் , உருவான இந்து பாசிசமும்” (மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதளப் பதிவு) நூல்கள் தான் அறிவின் வாசலை திறக்கின்றன. மனதை கீறி விதைபோடுகின்றன. இறுக்கமான போக்குகளை கட்டுடைத்து பரந்து விரிந்து மனிதனை சிந்திக்க வைக்கின்றன. மிக முக்கியமாக மனிதனை பக்குவப்படுத்துகின்றன. அவனது மூடத்தனங்களை உடைத்து சிந்தனையை தூண்டுகின்றன. அப்படிப்பட்ட ஒரு அறிய வரலாற்று ஆய்வு நூலை, மக்கள் மொழியில் எழுதியிருக்கிறார் தமிழ் தேசிய போராளி ஐயா.பா.நெடுமாறன் !! தமிழுக்காகவே சிந்திப்பது, தமிழ்நாட்டின் வளங்களை காப்பதற்காகவே போராடுவது என்பதை வாழ்வியலாக கொண்டவர். காமராஜின் அருமை தொண்டர் ஐயா. நல்லக்கண்ணுவை ஒரு நாணயத்தின் ஒழுக்கம் என்றால் இவர் அந்த நாணயத்தின் இன்னொரு பக்கமாகும். “பொடா” சட்டத்தின் கீழ் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருத்தப்போது தனது சக கைதிகளின் ஒத்துழைப்போடு அவர் எழுதியது தான் “உருவாகாத இந்தியா தேசியமும், உருவான இந்து பாசிசமும்” என்ற நூலாகும்.. காவி குழுக்கள் ஹிட்லரையும், முசோலினியையும் எவ்வாறு தங்களுது வழிகாட்டிகளாக கருதுகிறார்கள் என்பதையும், திலகரின் மதவெறியையும், அதை வ.வு.சிதம்பரனார் , பாரதியார் போன்றோர் ஏற்காததையும் .
காயல் தபால் நிலையம் இடமாற்ற விவகாரம்..! மஜக மாநில பொருளாளரிடம் காயல் சமூக ஆர்வலர்கள் மனு..
தூத்துக்குடி.ஆக.21., காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காலியிடம் ஒன்றில் - தபால் நிலையத்திற்கான கட்டிடத்தை வாடகை அடிப்படையில் வழங்கிட நகராட்சியிடம் தபால்துறை கேட்டுள்ளது. இதனை வலியுறுத்தி பொதுமக்கள், ஜமாத்துக்கள், கோவில்-தேவாலயங்களின் நிர்வாகிகள்_ ஆகியோரிடம் பெறப்பட்ட ஆதரவு கையெழுத்துக்கள் அடங்கிய மனு - நகராட்சி ஆணையர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான M.தமீமுன் அன்சாரி MLA அவர்களை "காயல்பட்டினம் நடப்பது என்ன?" குழுமம் சார்பாக நேற்று சென்னையில் நேரில் சந்தித்து - ஆகஸ்ட்-16 அன்று மஜக தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்ட மனு குறித்து நேரில் வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்பின் போது மஜக மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா உடனிருந்தார். இது சம்பந்தமாக உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணியை விரைவில் நேரடியாக சந்தித்து பேசுவதாக தமீமுன் அன்சாரி MLA உறுதியளித்தார். மேலும் - கட்சி பணி நிமித்தமாக நேற்று காயல்பட்டினம் வந்திருந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது அவர்களை "நடப்பது என்ன?" குழும நிர்வாகிகள் சந்தித்து பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காலியிடங்களை நேரடியாக காண்பித்தனர். தபால் நிலையத்தினை
கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலஹங்காவில் மஜக கிளை உதயம்…
பெங்களூரு.ஆக.20, கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகருக்குட்பட்ட எலஹங்கா பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) புதிய கிளை மாநகர செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில் இன்று துவங்கப்பட்டது. புதிய நிர்வாகிகளுக்கு கட்சியின் கொள்கைகள், மஜக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சிறப்பான சட்டமன்ற பணிகள் குறித்தும் மற்றும் இனி வரும் காலங்களில் புதிய நிர்வாகிகள் முன்னெடுக்கவேண்டிய பணிகள் குறித்தும் மாநகர செயலாளர் விளக்கி சிற்றுரை நிகழ்த்தினார்கள். இதில் மஜக மாநகர பொருளாளர் K.M.J.சல்மான், துணைச் செயலாளர்கள் A.அக்கிம் சேட், S.B.S.சாகுல்ஹமீது , இளைஞர் அணி செயலாளர் S.சண்முகம் தேவர் ஆகியோருடன் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_ IT_WING #KARNATAKA 20-08-2017
ஹாஜிகள் வழியனுப்பு நிகழ்ச்சி..! மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு..!!
சென்னை.ஆக.20., சென்னை விமான நிலையத்தில் இன்று விடிகாலை மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செல்லும் புனித பயணிகளை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் விமான நிலையத்திற்கு வருகைதந்து புனித பயனிகளை வழியனுப்பும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். வடபழனி பள்ளிவாசல் தலைமை இமாம் தர்வேஸ் ரஸாதி அவர்கள் " தக்பீர் " எழுப்பி பயணிகளுக்கு அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். உறவினர்களின் கண்ணீர் வழியும் தழுவல்களுக்கு பிறகு, பயணிகள் இறையில்லமாம் காபாவை தரிசிக்கப்போகும் உணர்ச்சிகரமான நிலையில் புறப்பட்டனர். தமிழக ஹஜ் கமிட்டி சார்பில் இவ்வருடம் புறப்பட்ட 8வது சவூதியா விமானத்தில் 300பேர் புறப்பட்டனர். நிறைவாக M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் விமான நிலையத்தின் உட்பகுதிக்கு சென்று , நிர்வாக பணிகள் குறித்து பயணிகளுக்கு ஏதேனும் தேவை இருக்கிறதா? எனக் கேட்டறிந்தார். தமிழ்நாடு ஹஜ் கமிட்டி அதிகாரிகளிடம் சேவை பணிகள் குறித்தும் ஆலோசனைகளை கூறினார். இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் N.A.தைமியா, மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், அமீரக IT-Wing செயலாளர் ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தலைமையகம், சென்னை 20.08.17