ஏப்.20., இன்று நாகை சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வெய்யிலிலும் அதிமுக நிர்வாகிகள் தலைமையில் இரட்டை இலைக்கு ஒட்டு வேட்டை நடத்தினார் நாகை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி. இதில் பொதுமக்களும் இளைஞர்களும் திரளாக வரவேற்று மகிழ்ந்தனர். உடன் மஜக மாநில,மாவட்ட,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அ.இ.அ.தி.மு.க (கூட்டணி கட்சி) நிர்வாகிகள் இருந்தனர். நமது சின்னம் இரட்டை இலை!!! மீனவர்களின் சின்னம் இரட்டை இலை!!! ஏழைகளின் சின்னம் இரட்டை இலை!!! வாக்களிப்பீர்!! இரட்டை இலைக்கு!!! தகவல் : மஜக ஊடகப்பிரிவு #votefor_ansari_nagai
Author: admin
ஒட்டன்சத்திரம் தொகுதி சிந்தலப்பட்டியில் மாலைநேர பிரச்சாரம்…
ஏப்.20., ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட சிந்தலப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் எஸ்_எஸ்_ஹாருன்_ரசீத் அவர்கள். இதில் கிராமமக்களும் , பெண்களும் திரளாக வந்து வரவேற்றனர். உடன் அதிமுகவின் ஒன்றிய செயலாளர் பால சுப்புரமனியம், நகர செயலாளர் உதயம் ராமசாமி, மஜக கொள்கைப்பரப்பு செயலாளர் மண்ணை செல்லச்சாமி, ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சைபுல்லாஹ் மற்றும் மஜக மாநில,மாவட்ட,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்: மஜக ஊடகப்பிரிவு #Vote_4_Haron_Odc
இந்திய மீனவர் சங்க நிர்வாகிகளுடன் மஜக மீனவரணி செயலாளர் சந்திப்பு…
ஏப்.20., இந்திய மீனவர் சங்கம் தலைவர் கிங்ஃபிஷ் Dr.M.D.தயாளன், பொதுச் செயலாளர் இறால் லிங்கேசன்,மற்றும் மாநில ,மாவட்ட நிர்வாகிகளை மனிதநேய ஜனநாயக கட்சி மாநில மீனவர் அணி செயலாளர் D.பார்த்திபன்,மாநில செயர்குழூ உறுப்பினர் நாசர் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஹாலித் மற்றும் வட்ட நிர்வாகிகள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசும் போது அவர்கள் நாங்கள் நாகை வேட்பாளர் தமிமுன்அன்சாரியை ஆதரித்து நாகை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்வோம் என்றும் மீனவர் சமுதாய வாக்குகள் தமீமுன்அன்சாரிக்கே என்று வாக்குறுதி அளித்தனர்...!!! எல்லாப்புகழும் இறைவனுக்கே இறுதி வெற்றி நமதணிக்கே...!!! தகவல் : மஜக ஊடகப்பிரிவு
நாகையில் அதிமுக(கூட்டணி) கட்சியின் நிர்வாகிகள் மஜக வேட்பாளருடன் சந்திப்பு.
ஏப்.20.,அதிமுக நாகை மாவட்ட செயலாளரும், வேதை சட்டமன்ற தொகுதியுடைய வேட்பாளருமான O.S.மணியன் அவர்களும், முன்னால் அமைச்சரும் நாகை மாவட்ட அதிமுக அவைத்தலைவருமான ஜீவானந்தம் அவர்களும், அதிமுக நகர செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான M.தமிமுன் அன்சாரி அவர்களை இன்று மதியம் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு