ஆகஸ்ட்.21, நெல்லை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயலாளர் நிஜாம் அவர்களும், மாவட்ட மனிதநேய கலை இலக்கிய அணி செயலாளர் பத்தமடை கனி அவர்களும் இணைந்து NRK DELIVERY என்ற உணவு வினியோக செயலியை தொடங்கி உள்ளனர். இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, பால பிரஜாபதி அடிகளார், டாக்டர் சார்லஸ், ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். நெல்லையை சுற்றிலும் 20 கி.மீட்டர் சுற்றளவுக்கு செயலி மூலம் வீடுகளுக்கு வினியோக சேவை நடைபெறும் என்றும், தேவையான உணவை இதில் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், பத்தமடை ஜமாத் தலைவர் மலுக்காமலி, நேசம் காலேஜ் ஆஃப் ஹெல்த் கல்லூரி இயக்குனர் ஹனிபா, சமூக ஆர்வலர் வழக்கறிஞர் அஹமது சாகிப் ஆகியோரும் வாழ்த்தினர். இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர்கள் நாகை முபாரக், காயல் சாகுல், தலைமை செயற்குழு உறுப்பினர் தூத்துக்குடி ஜாஹிர், குமரி மாவட்ட செயலாளர் ஹபிஸ், தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் நஜீப், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் A1 மைதீன், முருகேசன், ஆதிமூலம், S.S.U.மைதீன், ஹபிபுல்லாஹ், அசன்கனி, சங்கரன்
Tag: மஜக
தோப்புத்துறையில் மஜக முன்னெடுத்த தடுப்பூசி முகாம்!
நாகை மாவட்டம் தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முன்னெடுக்கப்பட்டது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை நீண்ட இம்முகாமில் 'கோவீ சீல்ட்' தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தடுப்பு மருந்தை செலுத்தி கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் முதல் டோஸ் போட வருகை தந்திருந்தனர். நீண்ட நாட்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும் மஜக விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் நம்பிக்கையுடன் செலுத்தி கொள்ள பலர் முன் வந்தது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மா.மீ அன்பரசு, வேதாரண்யம் வட்டார சுகாதாரத் துறை மருத்துவ அலுவலர் Dr. ராஜசேகர் மற்றும் மஜக மாவட்ட துணைச் செயலாளர் S.ஷேக் அகமதுல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் அ. ஷேக் மன்சூர், நகர செயலாளர் H.முகம்மது சரிபு, நிர்வாகிகள் A. அல்டாப் பாரக், S.இம்தியாஸ், முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
75வது சுதந்திர தின விழா! திருவொற்றியூரில் மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன் தேசிய கொடியேற்றினார்.!
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருவொற்றியூரில் சுதந்திர தின தேசிய கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நாசர் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்விற்கு மாவட்ட பொருளாளர் ஜாஃபர் வரவேற்புரையாற்றினார். மஜக மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன் கொடியேற்றி உறுதிமொழி கோஷங்களை முழங்கினார். நிறைவாக நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்து. இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர்கள் நிஜாம், மௌலானா, அன்சர் மற்றும் திருவொற்றியூர் பகுதி செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட,பகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம் 15.08.2021
மஜக திருச்சி மாவட்ட செயலாளர் இல்லத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் வருகை!
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் பேரா. மைதீன் அப்துல் காதர் இல்லத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேரில் வருகை புரிந்தார். தேர்தலில் திமுக வெற்றிக்காக சிறப்பாக பணியாற்றிய திருச்சி மாவட்ட மஜக-விற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் சமீபத்தில் திருமணம் முடித்த மாவட்டச் செயலாளர் மைதீன் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார். பின்னர் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களிடமும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் அவர்கள் இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களையும் அன்பையும் பரிமாறிக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அந்தோணிராஜ், துணைச் செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, முஹம்மது பீர்சா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருச்சி_மாவட்டம் 20.07.2021
அடையார் கேன்சர் இன்ஸ்டியூடிற்கு மஜக நன்கொடை..!
மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது நேரில் வழங்கினார்.!! சென்னை.ஜூன்.23., சென்னை அடையாரில் செயல்பட்டு வரும் கேன்சர் இன்ஸ்டியூட்டிற்கு மருத்துவ தேவைக்காக தமிழகம் முழுவதில் இருந்தும் மக்கள் வருகை தருகிறார்கள். கேன்சர் இன்ஸ்டியூடின் அடிப்படை தேவைகளுக்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நன்கொடை வழங்க நேற்று (22.06.2021) மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் நேரில் சென்று முதல்கட்டமாக காசோலை மூலமாக நன்கொடையை மருத்துவமனையின் டைரக்டர் சாகர் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மி, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் பசீர் அஹமது ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 22.06.2021