கேரளாவில் பரப்புரை … எதிர்கட்சி தலைவர் சதீசனுடன்… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பரப்புரை…

ஏப்ரல்.21.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் காங்கிரஸ் – IUML அங்கம் வகிக்கும் UDF கூட்டணியை ஆதரித்து இன்று கேரளாவில் பரப்புரையை தொடங்கியுள்ளார்

இன்று காலை காங்கிரஸ் கட்சியின் எதிர்கட்சி தலைவரான V.D. சதீசன் அவர்களை. பொன்னானி நாடாளுமன்ற தொகுதிக்கப்பட்ட திரூர் அங்காடியில் பரப்புரையில் சந்தித்து, அவருடன் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்.

இங்கு UDF சார்பில் IUML வேட்பாளர் அப்துல் சமது சமதானி போட்டியிடுகிறார்.

திருர் அங்காடி முஸ்லிம் லீக் MLA K.P.A மஜீது MLA-வும் பங்கேற்றார்.

அவரது பரப்புரைக்கு வரவேற்பளித்த மலையாளிகள் ஆர்வத்துடன் நீண்ட நேரம் தற்படம் (Selfi) எடுத்த வண்ணம் அவருடன் உரையாடினர்கள்.

பலர் யூட்யூப் (YouTube) பில் அவரது சட்டமன்ற நடவடிக்கைகளை பார்த்து அதை சுட்டிக்காட்டி பாராட்டினர்.

(செய்திகள் உள்ளிட விரிவான தகவல்கள் அடுத்த பதிவில் பகிரப்படும்)

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கேரளா – #தென்னிந்தியா
21.04.2024.