ஆகஸ்ட்.20., நெல்லை மாவட்டம் பத்தமடையில் NRK டெலிவரி என்ற விளையாட்டு கழகம் சார்பில் கைபந்து போட்டி நடைபெற்றது. அதன் பரிசளிப்பு விழா இன்று சிலம்பாட்டத்துடன் நடைபெற்றது. இதில் அவ்வூரை சேர்ந்த சிலம்பாட்ட வீரர்கள் கடும் வெயிலில் தங்கள் வீர தீர சாகசங்களை அரங்கேற்றினர். கடும் மதிய வெயிலில் கூடி நின்ற பொது மக்கள் ஆராவாரம் செய்தனர். நிறைவாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் போட்டியில் வென்றவர்களுக்கும், தனி சாதனையாளர்களுக்கும் பரிசு கோப்பைகளையும், கேடயங்களையும் வழங்கினார். இந்நிகழ்வில் ஜமாத் தலைவர் T.M. மலுக்காம் அலி, மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர்கள் காயல் சாகுல், நாகை முபாரக், மாவட்ட செயலாளர் நெல்லை. நிஜாம், மாவட்ட அணி நிர்வாகிகள் பத்தமடை கனி, முருகேசன், ஒன்றிய நிர்வாகிகள் கோதர், அசன் கனி, பத்தமடை பேருர் செயலாளர் பீர் முகம்மது உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_மாவட்டம் 20.08.2021
Tag: 75வது சுதந்திர தினம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மஜககொடியேற்று விழா! பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி சார்பில் புதிய கொடிக்கம்பம் நிறுவப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைப்பெற்றது. பக்கிரிப்பாளையத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ரகுமான் கான் அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் மஜக மாவட்ட செயலாளர் காஜா ஷெரிப் அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் முக கவசங்களும், இணிப்புகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் பாபு ஷானவாஸ், அமிர்கான், அப்பு, செங்கம் நகரச் செயலாளர் பாபுலால், திருவண்ணாமலை நகர செயலாளர் அக்பர், தி.மலை அப்துல் ரஹ்மான் மற்றும் நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவண்ணாமலை_மாவட்டம் 18.08.2021
75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில்! மஜகவின் முன் முயற்சியில் முதல் முறையாக தேசிய கொடி ஏற்றிய கிராமம்!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கற்காடு பகுதியில் மஜக முன்னெடுப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் தேசியக்கொடி ஏற்றப்படாத ஒரு கிராமமாக இப்பகுதி இருந்து வருகிறது. பல்வேறு சாதி, மத மக்கள் ஒற்றுமையோடு வாழும் ஊர்களில் இதுவும் ஒன்று. 75 ஆண்டுகளுக்கு பிறகு மனிதநேய ஜனநாயக கட்சியின் முன் முயற்சியில் சுசீந்திரம் கற்காடு பகுதியில் மஜக சார்பில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இன் நிகழ்வினை பொது மக்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ச்சியினை பரிமாறிக் கொண்டனர் நிகழ்ச்சிக்கு மாநகர பொருளாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார். இதில் ஊர் தலைவர், முன்னாள் தலைமை ஆசிரியர் தர்மராஜ் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் அம்பேத்கார் சிலைக்கு மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் கற்காடு அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஆசீர்பாய் ஈஸ்வரன், மாவட்ட செயலாளர் s. பிஜ்ருள் ஹபீஸ், மாவட்ட துணை செயலாளர் முஜிப் ரகுமான், அமீர்கான் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் அஷ்ரப் அலி இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை மாவட்ட செயலாளர் மிஸ்பா ஆலிம், மாநகர துணை செயலாளர்
75வது சுதந்திர தின நிகழ்வுகள்.. மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தில் 13 இடங்களில் தேசிய கொடியேற்றம்..
மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் அறந்தாங்கி நகரம், மணமேல்குடி, ஆவுடையார் கோவில், அறந்தாங்கி ஆகிய ஒன்றியங்களில் 75வது #சுதந்திர_தின கொடியேற்று நிகழ்ச்சிகள் 13 இடங்களில் நடதன. இதில் விவசாய அணி மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில், மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி, இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் நாகூர் கனி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முகம்மது குஞ்சாலி, வர்த்தக சங்கம் மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் செய்யது அபுதாஹிர், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முகம்மது அல்காப், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ், மாவட்ட துணை செயலாளர் சாஜிதீன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் ஷாஜஹான், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பகுருதீன், ஒன்றிய செயலாளர் முகம்மது இப்ராஹிம் ஆகியோர் கொடியேற்றினார்கள். மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டு சுதந்திர தின உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம் 15.8.21
மஜக மருத்துவ சேவை அணிக்கு பாராட்டு.! பாராட்டு சான்றிதழை பெற்றார் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான்..!!
கொரோனா நோய் தொற்று பரவல் நேரத்தில் சென்னை மண்டலத்தில் மக்களுக்கு உதவிய தன்னார்வலர்களுக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் பாராட்டு விழா நடைப்பெற்றது. கொரோனா நோய்த்தொற்று நேரங்களில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது, இரத்த தானம், நோயாளிகளுக்கு படுக்கைகள் ஏற்பாடு, கொரோனாவால் இறந்த உடல்கள் அடக்கம் என பல்வேறு பணிகளை செய்து வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின், மருத்துவ சேவை அணிக்கு இன்று நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மருத்துவமனை இயக்குனர் எழிலரசி அவர்கள் பாராட்டு சான்றிதழை வழங்க, மஜக மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் அதை பெற்றுக்கொண்டார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 15.08.2021