மே.21, மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மூன்றாம் கட்டமாக இன்று ஆழ்வார்திருநகரி ஒன்றியத்திற்குட்பட்ட குருகாட்டூர், கோட்டூர், இராஜங்காபுரம், முத்துராமலிங்கபுரம், கல்லாம்பாறை ஆகிய ஊர்களில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கும் கேம்பலாபாத்தை சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்களின் பங்களிப்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. மஜக வின் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் குருகை R.ராசுகுட்டி அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது. மாவட்ட விவசாய அணி செயலாளர் R.ஜெயசீலன், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ஆசிர் ராஜ்குமார் மற்றும் மஜகவினர் உடனிருந்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #தூத்துக்குடி_மாவட்டம். 21.05.2020
Tag: மஜக தூத்துக்குடி
மஜக தூத்துக்குடி மாவட்ட ஆலோசனைக்கூட்டம்..!
தூத்துக்குடி.நவ.22.., மனித நேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (21-11-2019) மாலை 4:30 மணியளவில் காயல்பட்டினத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் A.R.சாகுல் ஹமீத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணி குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் முகம்மது நஜிப், ராசுக்குட்டி, காதர்சாகிப், நகர நிர்வாகிகள் S.M.ஜிப்ரி, மீரான், அப்துர்ரஹ்மான், இப்னுமாஜா, சம்சுதீன் ஒன்றிய செயலாளர்கள் மீராசாகிப், பூபதி உள்ளிட்ட மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் காயல்பட்டினம் வருகை தந்துள்ள இணை பொதுச்செயலாளர் மொளவி J.S.ரிஃபாய் ரஷாதி அவர்களை நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தூத்துக்குடி_மாவட்டம் 21-11-2019