முகப்பு


பிரபல மார்க்க அறிஞரும் , தமுமுகவின் முன்னால் அமைப்பாளரும் , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனருமான அண்ணன் P.ஜெய்னுலாபுதீன் அவர்களுக்கு மஜக சார்பில் அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழை தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா . நாசர் அவர்கள் நேரில் வழங்கினார்கள் . அவருடன் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் . ராவுத்தர்ஷா , மாநில செயலாளர் A. சாதிக் பாட்ஷா ஆகியோரும் உடன் சென்றனர் . 20 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பு நெகிழ்வாகவும் , இனிமையாகவும் அமைந்தது . அனைவரையும் உபசரித்த அண்ணன் அவர்கள் மஜகவின் பணிகளை ஆர்வமுடன் கேட்டறிந்து , மாநாடு வெற்றி பெற துவா செய்வதாகவும் கூறினார் . முன்னதாக ததஜ தலைமையகத்திற்கு
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை சேக் அப்துல்லா அவர்கள் பிரபல இயக்குனர் அமீர் அவர்களை சந்தித்து அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டு அழைப்பிதழை வழங்கி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். உடன் தென்சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் MMH.முபாரக் அவர்களும் சென்று இருந்தார். -மஜக ஊடக பிரிவு
எதிர்வரும் மார்ச்.26 அன்று நடைபெற இருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு அழைப்பு பணியில் மாநில வர்தக அணி செயளாலர் N.E.M.யூசுப்ராஜா அவர்கள் அய்யம்பேட்டை தொழில் அதிபர் லக்கி சாப்ஜி, DR. M.A.ரஜாக் ஜானி.புதல்வர் Dr.A.M. அஸ்லம்,அஞ்சுமன் பதர்பள்ளிவால் இமாம் அப்துல் மாலீக் மன்பயீ, மணக்காட்டு பள்ளிவாசல் தலைவர் வாலன் அக்பர் துணைத்தலைவர் உச்சி ரஹ்மான்பாட்சா, மற்றும் பலபேர்களை மஜக மறுமலர்ச்சி மாநாடுவில் கலந்து கொள்ள அழைத்த போது…
மார்ச்.22., விவசாயிகளிடம் கடன் வசூல் என்கின்ற பெயரில் வணிக கூட்டுறவு அமைப்புகள், பொதுத்துறை வங்கிகள் காவல்துறை உதவியோடு அவமானப்படுத்தி அச்சுறுத்தி தற்கொலைக்கு தூண்டுவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும், தற்கொலை செய்துக்கொண்ட அரியலூர் அழகர் குடும்பத்திற்க்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சென்னையில் 22.03.2016 (இன்று) சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு சமூக சேவை அமைப்புகள்,மாணவர் அமைப்புகள் கலந்துக் கொண்டனர் இதில் மாணவர் இந்தியா சார்பாக அஸாருதீன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மார்ச்.22., இன்று மாலை சென்னையில் தலைமை காஜி சலாவுதீன் அவர்களை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் (MJK)அவைத்தலைவர் மௌலான.சம்சுதின் நாசர் உமரி அவர்கள் நேரில் சந்தித்து மார்ச் 26, அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழை நேரில் வழங்கினார். ஏற்கனவே மஜக வை நன்கு அறிந்திருந்த காஜி அவர்கள்,பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை பற்றி நலம் விசாரித்தார்.பிறகு மாநாட்டு பணிகள் குறித்தும்,கட்சி குறித்தும் நல்ல முறையில் கலந்துரையாடி,தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். இச்சந்திப்பின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் மூஸா ஹாஜியார், தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் MMH.முபாரக் ஆகியோர் உடனிருந்தனர். -தகவல் மஜக ஊடகப்பிரிவு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.