முகப்பு


மார்ச்.18.,வளைகுடா நாடுகளில் மனிதநேய கலாச்சார பேரவை என்ற பெயரில் இயங்கும் மனிதநேய ஜனநாயக கட்சி பல்வேறு நாடுகளில் தன் பணிகளை ஆற்றிவருகிறது. குவைத்தில் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு 18-03-2016 அன்று ம.க.பேரவை மண்டல தலைவர் முத்துக்காப்பட்டி ஹாஜா தலைமையில் நடைபெற்றது. ம.ஜ.க பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, மாநில செயலாளர் ராசுதீன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
#பேரன்புக்குரிய_மனிதநேய_சொந்தங்களே .. #ஏக_இறைவனின்_அமைதியும் , #சமாதானமும்_உரித்தாகுக ! உயிருக்குயிரான உங்களுக்கு ஒரு மடல் எழுத வேண்டும் என்று பல நாட்களாக முயன்று , அது இன்று தான் சாத்தியமாகியிருக்கிறது . கடுமையான மன அழுத்தங்கள் , ஓய்வற்ற பயணங்கள் , இடைவிடாத அலைப்பேசி அழைப்புகள் , தொடர்ந்து நிகழும் மக்கள் சந்திப்புகள் என தினமும் இயங்க வேண்டியிருக்கிறது . அவற்றுக்கு மத்தியில் தான் ஒரு நள்ளிரவில் இம்மடலை வரைகிறேன் . உங்களோடு பேசும்போதும் , உங்களுக்காக உழைக்கும் போதும் , உங்களுக்காக எழுதும் போதும் மனமும் ,உடலும் சோர்விலிருந்து விடுபட்டு சிறகு முளைத்த மகிழ்ச்சியில் குதூகலிக்கிறது என்பதே உண்மை . #சொந்தங்களே…! கடந்த அக்டோபர் 6
மார்ச்.18.,மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக மார்ச்18-3-2016 நடைபெறவிருக்கும் #வஞ்சிக்கப்பட்டோரின்_வாழ்வுரிமை_மாநாட்டில் எழுச்சியுரை ஆற்றவிருக்கும் பொது செயலாளர் அண்ணன் #தமிமுன்_அன்சாரி அவர்கள் இறைவனின் கிருபையால் குவைத் வருகை புரிந்தார்கள். விமானநிலையத்தில் மண்டலம் நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். அல்ஹம்துல்லில்லாஹ் அழைப்பில் மகிழும் மனிதநேய கலாச்சார பேரவை மனித நேய ஜனநாயக கட்சி குவைத் மண்டலம் 55278478,55260018,60338005
மார்ச்.15., மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக மார்ச் 18 நடைபெறவிருக்கும் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாட்டில் எழுச்சியுரை ஆற்றவிருக்கும்  மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் இறைவனின் கிருபையால் குவைத் வருகை புரிந்தார்கள். அல்ஹம்துல்லில்லாஹ் அழைப்பில் மகிழும் மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி குவைத் மண்டலம் 55278478, 55260018, 60338005
மஜக தலைமையகத்தில் வடசென்னை, தென்சென்னை,மத்திய சென்னை, காஞ்சி வடக்கு, காஞ்சி தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மார்ச் 26 அரசியல் மறுமலர்ச்சி மாநாடு தொடர்பான ஆயத்தப் பணிகள் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஹாரூன் ரஷீது, மாநில செயலாளர்கள் சாதிக் பாஷா, தைமிய்யா மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்திபன், மனித உரிமைகள் அணி செயலாளர் பல்லாவரம் ஷாஃபி ஆகியோர் கலந்துக்கொண்டனர். தகவல்: மஜக ஊடகப் பிரிவு (சென்னை)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*