முகப்பு


மார்ச்.18.,மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக மார்ச்18-3-2016 நடைபெறவிருக்கும் #வஞ்சிக்கப்பட்டோரின்_வாழ்வுரிமை_மாநாட்டில் எழுச்சியுரை ஆற்றவிருக்கும் பொது செயலாளர் அண்ணன் #தமிமுன்_அன்சாரி அவர்கள் இறைவனின் கிருபையால் குவைத் வருகை புரிந்தார்கள். விமானநிலையத்தில் மண்டலம் நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். அல்ஹம்துல்லில்லாஹ் அழைப்பில் மகிழும் மனிதநேய கலாச்சார பேரவை மனித நேய ஜனநாயக கட்சி குவைத் மண்டலம் 55278478,55260018,60338005
மஜக தலைமையகத்தில் வடசென்னை, தென்சென்னை,மத்திய சென்னை, காஞ்சி வடக்கு, காஞ்சி தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மார்ச் 26 அரசியல் மறுமலர்ச்சி மாநாடு தொடர்பான ஆயத்தப் பணிகள் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஹாரூன் ரஷீது, மாநில செயலாளர்கள் சாதிக் பாஷா, தைமிய்யா மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்திபன், மனித உரிமைகள் அணி செயலாளர் பல்லாவரம் ஷாஃபி ஆகியோர் கலந்துக்கொண்டனர். தகவல்: மஜக ஊடகப் பிரிவு (சென்னை)
இறைவன் நாடினால் வருகின்ற 13-03-2016 அன்று கோவை மாநகரில் கோட்டை மேடு வின்சென்ட் ரோட்டில் மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்… உரைகள் பொதுச்செயலாளர் : M.தமீமுன் அன்சாரி அவர்களும்,பொருளாளர் : ஹாரூன் ரஷீத் அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள். மஜக சொந்தங்களே அணித்திரண்டு வாரீர்…
இறைவனின் திருப்பெயரால்.. மனிதநேய ஜனநாயக கட்சி அழைக்கிறது… மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி முறையே ஜனநாயகமாகும்.இந்த கோட்பாட்டை செயல்படுத்தும் களம்தான் அரசியல்.ஜனநாயக அரசியல் மூலமே அதிகாரத்தை வென்றெடுக்க முடியும். அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கும் சமூகங்களே வெற்றி பெறுகின்றன.அரசியல் தெளிவை பெறும் குடிமக்கள் நிறைந்த நாடு தன்னைத்தானே வலிமைப்படுத்தி கொள்கிறது. எனவே குடிமக்களுக்கு அரசியல் அறிவையும்,அரசியல் அனுகுமுறைகள் குறித்த புரிதல்களையும் ஏற்படுத்தும் கட்சிகளே நாட்டுக்கு தேவைபடுகின்றன. இன்று அரசியல் என்பது மக்களுக்கு சேவையாற்றுவதற்கான ஒரு கருவி என்ற நிலை குறைந்து வருகிறது. லஞ்சம்,ஊழல்,பதவிவெறி,சாதிவெறி,மதவெறி,அடுத்தவரை வீழ்த்துதல்,இவைதான் அரசியலின் எழுதப்படாத இலக்கணங்களாக இருக்கின்றன. இவற்றை மாற்றியமைத்து மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசியலை முன்னெடுக்கும் வகையில் மனிதநேய ஜனநாயக கட்சி(MJK) கடந்த பிப்ரவரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.