முகப்பு


​கடந்த ஞாயிறு (ஜூலை 23) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் தென்னிந்திய முஸ்லிம் கலாச்சார மையத்தின் சார்பில் ஈத்மிலன் நிகழ்ச்சியுடன் , சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது . ​கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் , பிஷப் P. ஜெமிஜீயஸ் , திரு. சிவ குற்றாலம் , மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் இஸ்மாயில் , ஆக்ஸ்போர்டு அலிகான் , திருவை . அப்துல் ரஹ்மான் என பல்வேறு சமூக பிரமுகர்களும் பங்கேற்றனர் . ​இதில் பேசிய மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினர் அனைவரும் ஆன்மீக
இன்று மேதகு அப்துல் கலாம் அவர்கள் நம்மைவிட்டு பிரிந்து ஓராண்டாகிறது . அவர் வாழும் காலத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை விட , இறந்த பிறகும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார் . இன்று அவருடைய முதலாமாண்டு நினைவேந்தல் நாளில் நாடு முழுக்க ஒருவித ஏக்கம் கலந்த சோகம் இழையோடுவதை உணர முடிகிறது. தொலைக்காட்சிகளில் , F.M ரேடியோக்களில் , சமூக இணைய தளங்களில் , இன்று காலை முதல் அவரது நினைவுகள் ஊட்டப்படுகிறது . நாளிதழ்கள் சிறப்பு கட்டுரைகளை வெளியிட்டுள்ளன . நாடெங்கும் , சிறப்பு கருத்தரங்கள் , நினைவேந்தல் ஊர்வலங்கள் நடைபெறுகின்றன . குறிப்பாக பள்ளி , கல்லூரிகளை சேர்ந்த மாணவ – மாணவிகள்
திருச்சி மாநகரில் காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து உக்கிரத்தோடு  மஜக வின் சார்பில் கடந்த 24.07.2016 அன்று இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. துணைப் பொதுச்செயலாளர் #மைதீன்_உலவி தலைமையில், மாநில செயலாளர் ராசுதீன் முன்னிலையில், மாவட்ட நிர்வாகிகள் வழி நடத்தலில் மாலை 4 மணியளவில் மஜவினரும்,பொது மக்களும் திரண்டனர். மஜகவின் அழைப்பினை ஏற்று திரண்ட மக்கள் திருச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். #காஷ்மீர்_மக்களின்_போராட்டம்__தேசிய_இனத்தின்_போராட்டம் #காஷ்மீர்_பெண்களை_கற்ப்பழிப்பதற்க்கு_பெயர்_தேச_பக்தியா? #காஷ்மீர்_குழந்தைகளை தாக்குவதற்கு_அரச_படைகளுக்கு_அதிகாரமா? மத்திய அரசே…காஷ்மீரில் ராணுவத்தில் அத்துமீறல்களை தடுத்து நிறுத்து போன்ற பதாகைகளுடன்,நெருப்பை சுடும் முழக்கங்களும்,வேட்டையாட புறப்புடும் புலிகளின் உறுமலுடன் மஜகவினர் திருச்சி ரயில் நிலையத்தை சுற்றி வளைத்தனர். மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய படியே
கடந்த 24.07.2016 அன்று காலை 11.30 மணியளவில் திருநெல்வேலியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ராணுவத்தின் அத்துமீறல்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும் ரயில் மறியல் போராட்டம் பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. நெல்லை ஜங்ஷன் பகுதியில் கொள்கை பரப்புச் செயலாளர் #மன்னை_செல்லசாமி தலைமையில், மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர் #கோவை_நாசர் முன்னிலையில்,மாவட்ட நிர்வாகிகள் வழி நடத்துதலில் அலை அலையாய் மஜகவினர் திரண்டனர். #உரிமை_கேட்கும்_உறவுகளை_துப்பாக்கி_முனையில்__அடக்காதே! மத்திய அரசே…காஷ்மீருக்கு அமைதி குழுவை அனுப்பு போன்ற பதாகைகளை ஏந்தியும்,மஜக கொடிகளுடன் திரண்ட மக்கள் ரயில் நிலையம் முன்பு குழுமினர். #துடிக்கும்_குழந்தைகளின்_இரத்தத்தில்_தேச_பக்தி_பேசாதே! போன்ற அதிரடி முழக்கங்களை எழுப்பி பொது மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
* இன்று சென்னையில் மஜக நடத்திய ரயில் மறியலில் மஜகவின் அழைப்பை ஏற்று பல்வேறு சமூக பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டு ஆதரவு தெரிவித்தது, காஷ்மீரிகளுக்கான ஆதரவு களத்தை கூர்தீட்டியது.            * 4.30 மணிக்கு 500 பேர் கூடியதும் காவல்துறை நெருக்கடி கொடுத்து, 5 மணிக்குத்தான் போராட்டத்தை தொடங்குவோம் என கூறியதும் காவல்துறை ஏற்கவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கியதும் கூட்டம் ஆர்ப்பரித்தது. வேன்களில் மக்கள் வரிசையாக திரளத் தொடங்கியதும் எழும்பூர் முழுக்க போக்குவரத்து நிறுத்தப்பட்டது.                        * போக்குவரத்து ஸ்தம்பித்ததும், வீதிகளில் மஜகவினர் கொடிகளுடன் ஆவேசம் பொங்க முழக்கங்களை எழுப்பி ரயில் நிலையத்தை நோக்கி ஒடினர். காவல்துறை 2 அடுக்கு பாதுகாப்பு வளையத்தை உடைத்து தைமிய்யா தலைமையில் ரயில்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*