முகப்பு


கடந்த 14.10.2016 அன்று மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவருடன் துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை ஷேக் அப்துல்லா, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் ஜப்பார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டுக்கோட்டை பெரிய பள்ளியில் ஜமாத் சார்பில் பொதுச்செயலாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு கலந்துரையாடல் நடைபெற்றது. முன்னதாக ஆவணத்தில் பொதுச்செயலாளருக்கு ஆவணம் ஜமாத் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது அவ்வூரில் சமுதாயத்தில் இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்று, அப்பணியை மஜக முன்னெடுக்க வேண்டும்
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை முர்காப் கிளை மறு சீரமைப்பு கூட்டம் கடந்த  14/10/2016 வெள்ளிக்கிழமை முர்காபில் நடைபெற்றது. கிராஅத் சகோ. தாரிக் அஹமது அவர்கள், வரவேற்புரை சகோ. கமருதீன் அவர்கள், தலைமை சபியுல்லாஹ் அவர்கள், சிறப்பு அழைப்பாளராக  மண்டல து. செயலாளர் சகோ. அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டார். மேற்ப்பார்வையாளராக ஃபர்வானியா கிளை செயலாளர் சகோ. மாயவரம் சபீர் அவர்களும், ஃபாஹில் கிளை செயலாளர் சகோ. யூசுப்தீன் அவர்களும் கலந்து கொண்டனர். மண்டல ஆலோசகர் முசாவுதீன் முன்னிலையில் கிளை நிர்வாக தேர்ந்தெடுக்கப்பட்டது.   இதில் முர்காப் கிளை செயலாளராக சகோ. சபியுல்லாஹ் பொருலாளராக சகோ. கமருதீன், து.செயலாளர்கள்  சகோ.தாரிக் அஹமது, சகோ. 
கடலூர் வடக்கு மாவட்ட மாணவர் இந்தியா(பதிவு செய்யப்பட்டது) சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி A.P.J அப்துல் கலாம் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணிவிகளுக்கு கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் A.ரியாஸ் ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்ராக அரிமா சங்க தலைவர் திரு. C. லட்சுமிநாராயணன், செயலாளர் திரு. R.அன்வர்தீன்  ஆகியோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்ப்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.S.A.ஜேக்கப், உடற்கல்வி இயக்குநர் திரு. அசோகன் சிறப்பாக செய்து
தஞ்சை தெற்கு மாவட்டத்தில் மமக மாவட்ட துணை செயலாளர் பேராவூரணி சலாம் தலைமையில் பேராவூரணி தொகுதி முக்கிய நிர்வாகிகள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர். அத்துடன் பட்டுக்கோட்டையில் ஏராளமான கிறித்தவ சமுதாய சகோதரர்களும் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர். தகவல் :  மஜக ஊடகப் பிரிவு தஞ்சை தெற்கு
(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., வெளியிடும் பத்திரிகை அறிக்கை) மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தனது தோல்விகளை மறைப்பதற்கு மதவாத அரசியலை கூர்தீட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தலாக் விவகாரத்து நடைமுறை குறித்து பல்வேறு கேள்விப் பட்டியலை தயாரித்து, இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டுமென சட்ட ஆணையம் கடந்த 7-ஆம் தேதி கூறியிருக்கிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசு இக்கருத்துகளை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும் என்றும் கூறியிருக்கிறது. பல்வேறு மதங்கள், இனங்கள், சாதிகள், மொழிகள் ஆகியவற்றின் ஒன்றியமாகவே இந்திய திருநாடு பன்முகத்தன்மையோடு இயங்கி வருகிறது. ‘வேற்றுமையில் – ஒற்றுமை’ என்பதுதான் இந்தியாவின் சிறப்பம்சமாகும். இதை சீர்குலைக்கும் முயற்சியில்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*