முகப்பு


காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகளின் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் 17, 18 தேதிகளில் நடைபெறும் என அறிவித்திருந்தனர்… தமிழகம் முழுவதும் நடைபெறும் இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பங்கேற்பர் என அறிவிக்கப் பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமயில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு பீச் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயிலை மறித்தனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டு நூற்றுக்கணக்கான போலீஸார் அரண் போல் நின்று கொடுத்த பாதுகாப்பு வளையத்தை உடைத்து உள்ளே சென்ற போது சற்று பதட்டமான சூழ்நிலை உருவானது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக மண்ணடி
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்த மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க கோரியும் விவசாய சங்ககங்களின் சார்பில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் ரயில் மறியல் போராட்டத்தை ஆதரித்து இன்று தமிழகம் முழுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.. #mjk_rail_roko_cavery_issue தகவல் : மஜக மாநில ஊடகபிரிவு
இன்று சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் மாண்புமிகு சி.வி.சண்முகம் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவை கையளித்தார். சிறைக் கைதிகளின் மனித உரிமைகள் குறித்தும், அவர்களின் உயிராபத்து நோய்களுக்கு உரிய உயர் சிகிச்சை அளிப்பது குறித்தும், தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அம்மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இச்சந்திப்பின் போது மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் மற்றும் கோவை மாவட்ட மஜக நிர்வாகிகளும் உடனிருந்தனர். தகவல்: மஜக ஊடகப்பிரிவு(சென்னை)
மனிதநேய ஜனநாயக கட்சியின் மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்தீபன் அவர்கள் கடந்த வாரம் சாலை விபத்தில் சிக்கி சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராயபுரம் நாசர், வட சென்னை மாவட்ட செயலாளர் அஜீம்,மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர். மஜக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் அலைபேசியில் தொடர்புகொண்டதை மகிழ்ச்சியுடன் கூறியவர், இக்கட்சியில் இருப்பதற்காக பெருமைப்படுவதாக நெகிழ்ந்தார். தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவதால் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற செல்வதாக கூறினார். அவர் பூரண நலம் பெற இறைவன்
அக்.18.,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் மஜக சார்பில்  கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஐ. இப்ராஹிம், மாநிலசெயற்குழு உறுப்பினர் பி. ஷாஜகான், மாவட்ட பொருளாளர் சலீம் மற்றும் ஏராளமான மஜக தொண்டர்கள் கலந்துகொண்டு கைதாகினர்.    தகவல்; மஜக ஊடகப் பிரிவு (கடலூர் வடக்கு)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*