நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் மாநில செயலாளர் சீனி முகம்மது அவர்கள் தேசிய கொடியேற்றினார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான் தலைமையிலான மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது, தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 15.08.2021
Tag: India
லால்பேட்டையில் மஜக சார்பில் சுதந்திர தின விழா!
75 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக லால்பேட்டையில் மஜக அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் O.R ஜாகீர் ஹூசைன் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கியாசுதீன் மற்றும் பேரூர் நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
திருப்பூண்டியில் மஜக சார்பில் சுதந்திரதின கொண்டாட்டம்! இணையவழி சேவையை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி உற்சாகம்!!
75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூண்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மூன்று இடங்களில் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் J .ஷாகுல் ஹமீது தலைமையில், மாவட்ட துணை செயலாளர் M.சபுருதீன் மற்றும் விவசாய அணியின் மாவட்ட செயலாளர் V.ஜெக்கரியா ஆகியோர் கொடிகளை ஏற்றினர். தொடர்ந்து மஜக சார்பில் ஆதார் அட்டை, பான் கார்டு இணைத்தல், கணினி சிட்டா நகல் எடுத்தல் உள்ளிட்டவை சேவைகளை மாலை வரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய, கிளை, அணி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.