#தமிழக_அரசுக்கு_மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_கோரிக்கை! கொரோனா காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பல தரப்பையும் தமிழக அரசு அடையாளம் கண்டு உதவி வருவது பாராட்டுக்குரியது. இவர்களில் உலமாக்கள், மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களும், அடங்குவர் என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்கள் உள்ளிட்ட பள்ளி பணியாளர்கள், தர்ஹா பணியாளர்கள் மற்றும் மதரஸா ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரண உதவித்தொகையை இத்தருணத்தில் வழங்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். வக்பு வாரியத்தின் மூலமாக இதற்கான ஏற்பாடுகளை செய்தால், சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவர். இதை கனிவுடன் பரீசீலிக்குமாறு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 04.06.2021
Tag: மஜக
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!
ஜுன்.02., கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ், அவர்கள் தலைமையில் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் MP அவர்களை சந்தித்து தற்போதைய கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கை கள நிலவரம் பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். இதில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் கொரானா சிகிச்சை பற்றியும் அதில் மேம்படுத்த வேண்டியவை பற்றியும் ஆலோசித்தனர். மஜக நிர்வாகிகளின் கோரிக்கைகளை கேட்ட MP அவர்கள் நோயாளிகளுக்கு ஏதேனும் தேவை ஏற்படுமாயின் உடனடியாக தெரிவிக்குமாறும் அதன் பெயரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் நோயாளிகளுக்கும் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்குவது சம்பந்தமாக பயிற்சி பெற்ற ஆலோசகர்களை தன்னார்வ பணிக்கு தாங்கள் பயன்படுத்த வேண்டும் என மஜகவினர் கோரிக்கை வைத்தனர். இதற்காக முன் வடிவ திட்டமும் பாராளுமன்ற உறுப்பினரிடம் இரு தினங்களில் வழங்கப்படும் என மஜக வினர் தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட இளைஞரணி செயலாளர் முகமது அஷ்ரப் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது ஷாஜித், ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 02.06.2021
கொள்ளிடம் தனியார் மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு மஜக ஏற்பாட்டில் ஆக்ஸிஜன்!
ஜூன்.02, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக கொரோனா அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களிடமிருந்து லால்பேட்டை மஜக ஆக்ஸிஜன் சேவை மையத்திற்கு அழைப்பு வந்தது. அதனடிப்படையில், லால்பேட்டை மஜக கையிருப்பில் இருந்த 200 Kg/Cm2 மூன்று ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உடனடியாக மஜக ஆம்புலன்ஸில் நேரில் எடுத்து சென்று கொரோனா அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளின் தேவைக்காக ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டாரங்களை தாண்டி தனது ஆக்சிஜன் சேவையை லால்பேட்டை மஜக மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
அமைச்சரை சந்தித்து ஊரின் கோரிக்கைகளை கையளித்த மஜக!
ஜூன்.01, நேற்று நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட துளசியாப்பட்டினத்தில் ஆய்வில் அமைச்சர் திரு.சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் ஈடுப்பட்டிருந்தார். அவரை அப்பகுதியை சேர்ந்த மஜக நிர்வாகிகள் சலீம், இப்ராஹீம் ஷா தலைமையில் சந்தித்து ஊரின் தேவைகள் அடங்கிய மனுவை கையளித்தனர். அதனை பெற்று கொண்டு உடன் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
கொரோனா ஒழிந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திப்போம்!!
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ரமலான் நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தி!! உலகின் மற்றுமொரு திருநாளாக 'ஈதுல் பித்ர்' எனும் நோன்புப் பெருநாள் மலர்ந்திருக்கிறது. உலகப் பொதுமறையான திருக்குர்ஆன் அருளப்பட்ட புனித ரமலான் மாதத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டாக 30 நாட்கள் நோன்பு இருந்து அதன் நிறைவாக உலகமெங்கும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் இப் பெருநாளை கொண்டாடி மகிழ்கிறார்கள். பசியின் கொடுமையை உணரும் வகையிலும்;பிறர் பசியை போக்கிட வேண்டும் என்ற எண்ணத்தை பெறும் வகையிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் இறை வழிபாட்டோடு நகரும் இந்த நாட்கள் உணர்வுபூர்வமானவை! நிறைவாக பெருநாளை கொண்டாடி மகிழ வான்பிறையை எதிர்நோக்கும் நிமிடங்கள் அழகானவை! ஆனால் அந்த உற்சாகத்தை வழக்கம் போல கொண்டாட முடியாத சூழலில் நாம் இருக்கி றோம். கொரணா பெருந்தொற்றின் காரணமாக குடும்பத்தினரோடும், பல் சமூக நண்பர்களோடும் இப்பெருநாளை கொண்டாடி மகிழும் நிலையில் தற்போதைய சூழல் இல்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மையாகும். சென்ற ஆண்டைப் போலவே இவ்வாண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் பரவுகின்ற நிலையில்; அவரவர் இல்லங்களிலேயே தொழுது விட்டு மகிழ்ச்சியினை கட்டுப்பாட்டோடு வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம்