முகப்பு


ஜுன்.02., கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ், அவர்கள் தலைமையில் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் MP அவர்களை சந்தித்து தற்போதைய கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கை கள நிலவரம் பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். இதில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் கொரானா சிகிச்சை பற்றியும் அதில் மேம்படுத்த வேண்டியவை பற்றியும் ஆலோசித்தனர். மஜக நிர்வாகிகளின் கோரிக்கைகளை கேட்ட MP அவர்கள் நோயாளிகளுக்கு ஏதேனும் தேவை ஏற்படுமாயின் உடனடியாக தெரிவிக்குமாறும் அதன் பெயரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் நோயாளிகளுக்கும் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்குவது சம்பந்தமாக பயிற்சி
ஜூன்.02, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக கொரோனா அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களிடமிருந்து லால்பேட்டை மஜக ஆக்ஸிஜன் சேவை மையத்திற்கு அழைப்பு வந்தது. அதனடிப்படையில், லால்பேட்டை மஜக கையிருப்பில் இருந்த 200 Kg/Cm2 மூன்று ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உடனடியாக மஜக ஆம்புலன்ஸில் நேரில் எடுத்து சென்று கொரோனா அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளின் தேவைக்காக ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டாரங்களை தாண்டி தனது ஆக்சிஜன் சேவையை லால்பேட்டை மஜக மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
ஜூன்.01, நேற்று நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட துளசியாப்பட்டினத்தில் ஆய்வில் அமைச்சர் திரு.சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் ஈடுப்பட்டிருந்தார். அவரை அப்பகுதியை சேர்ந்த மஜக நிர்வாகிகள் சலீம், இப்ராஹீம் ஷா தலைமையில் சந்தித்து ஊரின் தேவைகள் அடங்கிய மனுவை கையளித்தனர். அதனை பெற்று கொண்டு உடன் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட பொதக்குடி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பொதக்குடி சுற்றுவட்டார பகுதி மக்களின் உயிர் காக்கும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு நபர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பெற்று கொடுக்கப்பட்டதையும் தொடர்ந்து மேலும் தேவைகள் அதிகரித்தால் புதிதாக இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்கப்பட்டு தேவையுடையவர்கள் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்த ஜிந்தா மதார் அவர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்து அனுப்பிய கடிதத்தை தலைமை ஏற்றுக் கொள்கிறது. -பொதுச் செயலாளர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*