சென்னை.மார்ச்.17, தமிழகம் எங்கும் நடைபெறுவது போல சட்டமன்றத்திலும் "கொரோனா வைரஸ்" முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்றிலிருந்து பார்வையாளர்கள் வருகைக்கு தடை போடப்பட்டிருக்கிறது. சபைக்குள் நுழையும் MLA க்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இன்று மஜக பொதுச் செயலாரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மருத்துவ கருவி மூலம் பரிசோதனை செய்துக்கொண்ட பின்னரே அவைக்குள் சென்றார். அவைக்கு வெளியே வரும் போதும், அவ்வாறே அதை பின்பற்றினார். இது குறித்து செய்தியாளர் ஒருவர், "நீங்கள் இதை முறையாக பின்பற்றுகிறீர்கள்" என பாராட்டினார். அரசு எடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் உட்பட பொதுமக்கள் எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்றும், வருமுன் காப்பதே சிறந்தது என்றும், இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இவ்விஷயத்தில் பொதுமக்கள் அலட்சியம் காட்டக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம் 17-03-2020
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
கொரோனா தற்காப்பிற்கு மதுக்கடைகளை மூடுக! முககவசத்தோடு ஆட்சியரிடத்தில் மனு! திருச்சி மஜகவினரின் நூதனப் போராட்டம்!
திருச்சி. மார்ச் 16, இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில்.. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி கல்லூரி விடுமுறை, எல்லையோர வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் ஒன்றுக் கூடுமிடங்களை மூடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதே போல், நோய்களின் பிறப்பிடமாகவும், சுகாதார சீர்கேட்டிற்கு சவால்விடும் மதுபான கடைகளான டாஸ்மார்கை குறைந்தது மூன்று மாதங்களுக்கு மூடி அதனை சுற்றி வாழும், கடந்து செல்லும் மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட பொருளாளர் பேரா. மைதீன் அப்துல்காதர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் பக்கீர் மைதீன், தொழிற்சங்க தலைவர் அந்தோணி, சுற்றுச்சூழல் அணி செயலாளர் கமால், நிர்வாகிகள் முகமது பீர்ஷா, ஆழ்வார்தோப்பு காதர், முஸ்தபா, ஜம்ஜம் பஷீர், ஜாகிர் உசேன், ரஹமத்துல்லா உள்ளிட்டோர் 'முக கவசம்' அணிந்து பங்கேற்றிருந்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம்
இங்கிலாந்தில் நிராகரிக்கப்பட்ட சட்டம் இது..! விருதாச்சலத்தில் முதமிமுன்அன்சாரி MLA பேச்சு.!
மார்ச் 16, கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசியதாவது.. இந்த மாபெரும் கூட்டம் மக்கள் எழுச்சியின் வெளிப்பாடாக உள்ளது. இதில் எல்லோரும் பாதிக்கப்படுவதால், போராட்ட களம் விரிவுபடுத்தப்பட வேண்டும். வட இந்தியாவைப் போல பன்மைத்தன்மையாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இங்கு தீர்மானங்களை நிறைவேற்றுகிறீர்கள். அதனை ஒரு வன்னிய சமுதாய, ஒரு தலித் சமுதாய, ஒரு தேவர் சமுதாய, ஒரு உடையார் சமுதாய, ஒரு யாதவ சமுதாய, ஒரு நாடார் சமுதாய தலைவர்கள் என பலரையும் அழைத்து, அவர்கள் மூலம் வாசித்திருக்க வேண்டும். அதுவே கோரிக்கையை வலிமைப்படுத்தும். எங்களையும் அழையுங்கள் என அவர்கள் நம்மிடம் சொல்லுகிறார்கள். அரசியல் தலைவர்களை அழைக்கிறீர்கள், அதுபோல சமூக-சாதி தலைவர்களையும் அழைத்து கருத்துக்களைக் கூற வைக்க வேண்டும். ஏனெனில் இது எல்லோருக்குமான ஆபத்து. எனவே, களத்தில் எல்லோரையும் உள்ளடக்கி பல இடங்களில் நடக்கிறது. அது இன்றும் பரவலாக்கப்பட வேண்டும். இதேபோன்றே குடியுரிமை தொடர்புடைய சட்டத்தை இங்கிலாந்திலும் கொண்டுவந்தார்கள். தேசிய குடியுரிமை அடையாள பதிவேடு என்ற பெயரில் வெள்ளையர்களை,
திருச்சி ஷாகின்பாக்கில் மஜக தலைமைக்கழக பேச்சாளர் பங்கேற்று கண்டன உரை
மார்ச் 16, திருச்சிராப்பள்ளியில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. மஜக சார்பில் தலைமைக் கழக பேச்சாளர் திருப்பூர் இ.ஹைதர்அலி பங்கேற்று கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பேசினார். போராட்டத்திற்கு நாளுக்கு நாள் வெகுஜன மக்கள் ஆதரவு பெருகி வருவதாகவும், ஓய்வு பெற்ற நீதியரசர்கள், இ.ஆ.ப உள்ளிட்ட உயர்பதவிகளை வகித்தவர்களும் களத்திற்கு வருது இதனை உறுதிப் படுத்துவதாகவும் தெரிவித்தார். மேலும், இவர்களை பயன்படுத்தி கருத்தரங்கள் மூலமாக மக்களிடையே இச்சட்டங்களின் அபாயங்கள் குறித்து அனைவருக்கும் எடுத்து சொல்வோம். நிச்சயம் இப்போராட்டம் வெல்லும். அதுவரை தொடர்ந்து உறுதியோடு போராடுவோம் என தெரிவித்துக் கொண்டார். இதில், மஜக மாவட்ட செயலாளர் அஸ்ரப் அலி, பொருளாளர் மொய்தீன் அப்துல் காதர், மாவட்ட துணை, அணி, மாநகர், பகுதி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம். 15/03/2020
பிள்ளைகளை பிராய்லர் கோழிகளாக உருவாக்கக் கூடாது! பள்ளிக்கூடவிழாவில் தமிமுன்அன்சாரி MLA பேச்சு!
மார்ச்.15, பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் உள்ள மாடர்ன் பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது.. நகர்ப்புற மக்கள் அனுபவிக்கும் நவீன கல்வியை கிராமங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன என்பது நிராகரிக்க முடியாத உண்மையாகும். அரசு பள்ளிக் கூடங்களும் இதே அளவில் சேவை செய்ய வேண்டும் என விரும்பினாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதில் முன்னணியில் இருக்கின்றன என்பது உண்மை. இப் பள்ளிக்கூடத்தின் சிறப்பு என்னவெனில், கற்பித்தல் என்ற வட்டத்தையும் தாண்டி , மரம் நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பொதுச்சேவைகளை ஊக்குவித்தல் என்று பிள்ளைகளை பன்முகத் தன்மையோடு உருவாக்குவதாகும். அதுபோல் வசதிமிக்கவர்களிடமிருந்து நல்ல ஆடைகளை பெற்று ஏழைகளுக்கு அதை வினியோகிப்பது மனிதாபிமானப் பணிகளில் ஒன்றாகும். மேலும் இந்த ஊரில் உள்ள பொதுநல சேவகர்களை கண்டறிந்து வருடந்தோறும் விருது வழங்கி சிறப்பிப்பதும் பாராட்டுக்குறியதாகும். ஒரு கல்வி நிறுவனம் கற்பித்தலையும் தாண்டி சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, மாணவ மாணவிகளையும் அவ்வாறு உருவாக்குவது வரவேற்கத்தக்கது. இன்று ஒருபுறம் கல்வி வணிகமயமாகி வரும் நிலையில்,