குடியரசு தின விழா கிராமசபை கூட்டம். நாகை MLA பங்கேற்பு!

image

குடியரசு தினத்தை முன்னிட்டு, நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் ஊராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்தும், நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் ஊராட்சி செயலாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு, அந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

பொரவச்சேரி ஊராட்சியில் தண்ணீர் பிரச்சனை இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தண்ணீர் கிடைக்க முயற்சி செய்வதாகவும் கூறினார்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
26.01.18

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*