இறந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்…!

image

மெர்சல் படத்திற்கு இலவச விளம்பரம் தேடித்தந்துள்ளது பாஜக..!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கடும் கண்டனம்…!!!

(#மஜக_பொதுச்செயலாளர்
#M_தமிமுன்_அன்சாரி_MLA பேட்டி)

நாகப்பட்டினத்தில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நாகை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட பொறையாறில் போக்குவரத்து பணியாளர்கள் ஓய்வில்லம் இடிந்து விழுந்து 8 பேர் உயிர் இழந்ததற்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். இறந்தவர்களுக்கு தமிழக அரசு 7.5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியது போதாது என்றும், அதை 25 லட்ச ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எங்களை மோடி பார்த்துக் கொள்வார் என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், அமைச்சர்கள் இப்படி மக்களின் மனநிலையை புரியாமல், பின்விளைவுகளை அறியாமல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தங்கள் துறைச் சார்ந்த விசயங்களில் பற்றி மற்றுமே கருத்து தெரிவிப்பது அவர்களின் கண்ணியத்தை காக்கும் என்றும் கூறினார்.

இவர்கள் இப்படி உலருபவர்கள் என்பதால் தான், மாண்புமிகு ஜெயலலிதா அம்மா அவர்கள் இரும்புப் பிடிக்குள் வைத்திருந்துள்ளார்.

அதிமுகவுக்கு தலைமை மோடி என்பது போல பேசுவது அதிமுக உண்மை தொண்டர்களின் மனநிலைக்கு எதிரானது என்றும் கூறினார்.

மெர்சல் படம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் தான் இந்த படத்தை இதுவரை பார்க்கவில்லை என்றும், அந்த படத்திற்கு பாஜக இலவச விளம்பரத்தை தேடி தந்துள்ளது என்றும், அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.

உண்மைக்கு மாறாகவோ, வரலாற்று நியாயங்களுக்கு எதிராகவோ காட்சிகளோ வசனங்களோ இருந்தால் அதை நீக்கலாம் ஆனால் நான்கு பேர் சேர்ந்தால் அன்றாடம் பேசிக் கொள்ளும் நடப்பு அரசியல் நிகழ்வுகளை சினிமாவில் வைக்க கூடாது என்பது ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல என்று கூறினார்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகை_தெற்கு_மாவட்டம்
21_10_17