கடலூர் தெற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் O.R.ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக
மஜக பொதுச்செயலாளர்
மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் அவர்கள் பொதுச் செயலாளருடன் உடன் இருந்தார்.
இதில் “மக்களுடன் மஜக” பணிகள் குறித்து பேசப்பட்டது. எதிர்வரும் பிப்ரவரி-28 கட்சியின் 8-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்று நிகழ்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இறுதியாக தலைமை எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு பணிகள் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட துணை செயலாளர்கள் முஹம்மது ரபீக், முஹம்மது இக்பால், முஹம்மது ரியாஸ், கத்தார் மண்டல செயலாளர் ஆயங்குடி யாசின், மாணவர் இந்தியா மண்டல செயலாளர் வழக்கறிஞர் முஸ்ரப், மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் பைசல், பாரூக், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் வண்டிகேட் காஜா மைதீன், குமராட்சி ஒன்றிய செயலாளர் காசீம், லால்பேட்டை நகர செயலாளர் யூனுஸ், நகர பொருளாளர் நூர் முஹம்மது, நகர துணை செயலாளர் சாதுல்லா, கொள்ளுமேடு நகர பொருளாளர் பாசில், நகர மருத்துவணி தாலிப் ரஹ்மான், நகர மாணவர் இந்தியா ரைசுதீன், அஜ்மல், பைசல், அஹமது, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.