பிப்ரவரி 11 நெய்வேலி NLC சுரங்கம் முற்றுகை போராட்ட ஆயத்த ஆலோசனைக் கூட்டம்…

நெய்வேலி என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு 25,000 ஏக்கர் வேளாண் நிலங்களை கையப்படுத்தும் என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பிப்ரவரி 11-ம் தேதி சுரங்கம் இரண்டு முற்றுகை போராட்டம் நடைபெற இருக்கிறது.

இது குறித்தான ஆயத்த ஆலோசனை கூட்டம் நேற்று (22.01.2023) மாலை மாநிலத் துணைச் செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான நெய்வேலி இப்ராகிம் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் நாகை முபாரக் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் நிலத்தை இழந்த பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் மஜக இளைஞரணி செயலாளர் ஹமீது ஜெகுபர், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ரபீக் முஹம்மது, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நூர் முஹம்மது, அஜீஸ்கான், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாபர் அலி, இளைஞரணி செயலாளர் மன்சூர், நகர செயலாளர் ஆதம் சேட், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ஹாஜா மக்தூம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.