டாஸ்மாக் வருமானம் என்பது பெருமை அல்ல! பட்டமளிப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

நாகர்கோவிலில் செயல்படும் ANNAI NIVETHA ELECTROPATHY MEDICAL COLLEGE-ல், 14-வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.

இதில் படிப்பை முடித்த மாணவ, மாணவிகளுக்கு மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் பட்டங்களை வழங்கி வாழ்த்துரை கூறினார்.

இங்கு இயற்கை மருத்துவத்தை முன்னிலைப்படுத்தும் நான்கரை ஆண்டு கால மருத்துவ படிப்பு கற்றுத் தரப்படுகிறது..

இது ஒன்றிய அரசின் NEHM OF INDIA-வின் அங்கீகாரம் பெற்ற படிப்பாகும்.

இந்த வளாகத்தில் மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது.

இன்றைய நிகழ்வில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் MLA அவர்களும் பங்கேற்று சிறப்பித்தார்.

இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசியதிலிருந்து முக்கிய கருத்துக்கள் பின்வருமாறு…

பட்டம் பெற்ற உங்கள் அனைவரின் பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன்.

மருத்துவ சேவை என்பது உயர்வானது. மனிதாபிமானம் நிறைந்தது. இதில் கருணையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவமும், மருத்துவமனைகளும், மருந்துகளும் இன்று விலை உயர்ந்ததாக மாறியுள்ளது.

இதை கருத்தில் கொண்டு எளியவர்களுக்கு நீங்கள் கனிவுடன் பணியாற்ற வேண்டும்.

வணிக நோக்கமும், வருமான நோக்கமும் தவறில்லை. ஆனால் அது நோயாளிகளை சுரண்டும் விதமாக இருக்கக் கூடாது. அவர்களின் வாழ்வாதாரத்தை, வருமானத்தை பாதிப்பதாகவும் இருக்கக் கூடாது.

சென்னையில் டாக்டர் சேப்பன் அவர்கள் ஆயிரம் விளக்கு பகுதியில் கிளினிக் வைத்திருந்தார். அவர் இந்திய குடியரசு கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

அவரைத் தேடி வரும் நோயாளிகளுக்கு பத்து ரூபாயில் மருத்துவம் பார்த்தார். அவரது மருத்துவ சேவை உயர்வானதாக இருந்தது.

சென்னை அருகே ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த ஒரு மருத்துவர் இறந்த போது, அப்பகுதி மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்ததாக கருதி துடித்துப் போனதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தோம்.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு நீங்கள் சேவையாற்ற வேண்டும்.

இங்கு ரத்தத்தை தூய்மை செய்து ; நுரையீரலை சுத்தப்படுத்தி; மூன்று நாட்களில் நோய்களை கண்டறிந்து குணப்படுத்தும் மருத்துவ முறையை செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது.

மேலும் மதுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நல்ல முறையில் அறிவியல் ரீதியாக மருத்துவம் பார்ப்பதும் பாராட்டத்தக்கது.

நாம் அனைவரும் இணைந்து, மக்கள் குடிபோதையில் சீரழிவதை தடுக்க வேண்டும்.

நான் சட்டசபையில் பணியாற்றிய போது, பூரண மதுவிலக்கை வலியுறுத்தி பலமுறை பேசியுள்ளேன் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.

பண்டிகை காலங்களில் டாஸ்மாக் வருமானம் பெருகுவதை பெருமையாக கருதக்கூடாது.

சென்ற பண்டிகையை விட, இந்த பண்டிகையில் கூடுதல் விற்பனை என்பது நல்ல செய்தி அல்ல.

மது சமூகத்தை சீரழிக்கிறது என்பதை புரிய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பாமிலா பேகம் எழுதிய ‘பாலைவன பனித்துளிகள்’ என்ற கவிதை நூலையும் பொதுச்செயலாளர் வெளியிட்டு வாழ்த்து கூறினார்.

விழாவில் பங்கேற்றவர்களுக்கு காயிதே மில்லத் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் டாக்டர் KMA ஹபீப் நஜ்ஜார், திருமதி ஆயிஷா, திரு சிவகுமார், டாக்டர் கதீஜா நஜ்ஜார், திரு . டேனியல், டாக்டர் விவேக், திரு ஈஸ்வரன், வழக்கறிஞர் சிவக்குமார், திரு.கொய்யா கபீர்,டாக்டர் சந்தியா நோபல் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இதில் துணைப் பொதுச்செயலாளர் நாசச்சிகுளம் தாஜுதீன், மாநில செயலாளர் நாகை முபாரக், மாவட்டச் செயலாளர் பிஜுருல் ஹபீஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபிகர் அலி, மாவட்ட துணைச் செயலர்கள் முஜிப் ரஹ்மான், அமீர்கான்,IT WING மாவட்ட செயலாளர் K.S. ரபீக், மாவட்ட மீனவர் அணி செயலாளர் அந்தோணி அலங்காரம், மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் பாரிஸ், மாநகர செயலாளர் மாஹின் இப்ராஹிம், மாநகர இளைஞரணி துணை செயலாளர் அபுதாஹிர் , மாநகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் எம் எச் சாகுல்,கலந்து கொண்டனர்.