சிறுபான்மையினரின் கல்வி முன்னேற்றத்தை முடக்குவதா

கடந்த 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கென ‘PRE METRIC SCHOARSHIP’ என்று அறிவிக்கப்பட்டிருந்த கல்வி உதவித்தொகையை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்துள்ளது.

ஏற்கனவே RTE திட்டம் மூலம் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதால் இத்திட்டத்தை ரத்து செய்கிறோம் என ஒன்றிய அரசு காரணம் கூறியுள்ளது.

பெருமுதலாளிகளுக்கு தரகு வேலை செய்வதில் பெருமைப்படும் ஒன்றிய அரசு, கார்ப்பரேட்டுகளின் வாராக்கடன்கனை ரத்து செய்து அவர்களை திருப்தி படுத்துகிறது.

ஆனால் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் சிறுபான்மையின சமூகங்களை சேர்ந்த ஏழை. எளிய மாணவ, மாணவிகளின் கல்வி உதவிகளை நிறுத்துவதில் அக்கறை காட்டுகிறது.

இது எந்த வகையிலும் நியாயமில்லை.

இம்முடிவு சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மட்டுமின்றி, மாற்று திறனாளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் பாதிக்கிறது.

எனவே ஒன்றிய அரசின் இம் முடிவை அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்து குரல் எழுப்பிட வேண்டும் என்றும், அரசியல் கட்சிகளும், சமூக நீதி இயக்கங்களும் இதற்கு எதிராக செயலாற்ற வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி

28.11.2022