மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனை கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் N.M.மாலிக் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன், மாநில செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாறுமான நாகை முபாரக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், மாவட்ட மறுசீரமைப்பு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் குவைத் மண்டல முன்னாள் துணை செயலாளர் மயிலை.சபீர், மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட துணைச் செயலாளர் ஹாஜா சலிம், அஜ்மல் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயளாலர் நீடூர் குர்ஷித் கான், விவசாய அணி மாவட்ட செயலாளர் லியாகத் அலி, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் நீடூர் ஜெப்ருதீன், மற்றும் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.