இளைஞர்களை அறிவு மயமாக்க வேண்டும்…நாச்சிக்குளம் மஜக இல்ல மணவிழாவில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…

ஜூலை:14

மஜக சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜான் முகம்மது அவர்களின் மகள் வஸீபா மணமகளுக்கும் மணமகன் முஹம்மது ஹனிபா அவர்களுக்கும் இன்று நாச்சிக்குளத்தில் திருமணம் நடைபெற்றது.

இதற்கு மனிதநேய ஐனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி , அவர்கள் தலைமையேற்று வாழ்த்திப் பேசினார்.

இந்நிகழ்வில் மஜக துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநிலச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்டச் செயலாளர் சீனி ஜெகபர்தீன், ஐக்கிய அரபு அமீரக மண்டல செயலாளர் அசாலி அஹ்மது, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருப்பூண்டி சாகுல், பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, நாச்சிக்குளம் கிளைச் செயலாளர் சதாம் உசேன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்
14.07.2022