மாநில செயலாளர் சீனி முஹம்மது அவர்களை நேரில் சந்தித்து மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது நலம் விசாரித்தார்..!!

சென்னை.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் சீனி முஹம்மது அவர்கள் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து இறைவனின் அருளால் குணம் அடைந்து இல்லம் திரும்பி உள்ளார்.

அவரை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

அப்போது சீனி முஹம்மது அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளும், என்னுடன் சேர்ந்து சமுதாய பணியாற்றிய மக்களின் பிரார்த்தனையாலும் எனது உடல் நலம் பெற்று வந்துள்ளேன் நானும் அவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்று நெகிழ்வுடன் கூறினார்.

இச்சந்திப்பில் வர்த்தக அணி மாநில துணைச்செயலாளர் சாகுல் ஹமீது சேட், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, துறைமுகம் சிக்கந்தர், ஆலம், அக்மல், சைதாப்பேட்டை ரபி ஆகியோர் உடன் சென்று உடல் நலம் விசாரித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்